பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி து.ாமணி செய்யுள்-41 கங்கை, காடுகள் வாநதிதிடுமந்தாகினிதிரிபதகைமற்றைச் சு நதிகங்கைபேர்சானவிபகிரதியுஞ்சொல்லும் பெருகுமுதனங்குமோடிபேசியகொற்றிசூரி மருவியவடுகிமாரிவடுகன்தாய்காடுகாள்பேர் 41 வர நதி, நீடு மந்தா கினி,திரி பதகை, மற்றைச் சுரநதி, கங்கைப் பேர்,சா னவி,பகி ரதியும் சொல்லும். பெருகுமு தணங்கு, மோடி, பேசிய கொற்றி, சூரி மருவிய வடுகி, மாரி வடுகன்தாய், காடு காள்பேர். பெ. பொ. விளக்கம் : கங்கை-வெள்ளை நிறமுடையவள் வரநதி-வரத்தால் வந்த ஆறு மந்தாகினி-மெல்ல நெளிந்து செல்வது திரிபதகை-முன்று நிலங்களிலும் ஒடுவது சுரநதி-தேவர்களின் ஆறு சாணவி-சன்னு என்னும் முனிவரது செவியினின்றும் வந்தது பகிரதி-பகிரதனால் வேண்டிப் பெறப்பட்டது காடுகாள்-(காடுகிழாள் என்பதன் மரூஉ) காட்டுக்குரிய தலைவி முதுமை அணங்கு-தொன்மைத் தெய்வப் பெண் & மோடி-ஒன்றுவிட்டொன்று காட்டும் வல்லமையுடையவள் கொற்றி-வெற்றியுடையவள் சூரி-கடிய சீற்றமுடையவள் வடுகி-வைரவனாம் வடுகனை ஈன்றவள் மாரி-கொலை செய்பவள் நீடு-நீண்ட