பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-5 ஊதை,வங் கூழ்,சிறந்த ஒலி,சதா கதி,உயிர்ப்பு; காதரி, கந்த வாகன், பிரபஞ்சணன், சலனன், காற்றே, பெயர்ப் பொருள் விளக்கம்: காற்று-இயங்கிச் செயற்படுத்துவது வாதம்-தொடர்ந்து செல்வது கால்-இயங்குவது வளி-உயிர்க்கு வள்ளன்மையுடையது மருத்து-உலகை அழிக்குந் தன்மை உடையது வாண்ட-வாடவைக்கும் குளிருடையது பவனம்-தூய்மை செய்வது வாயு-இடையறாது இயங்குவது கூதிர்-குளிர் தருவது - மாருதம்-அழிக்கும் கடுமையானது மால்-பெருமையுடையது கோதை-ம்ென்மையானவற்றைக் கோதிச் செல்வது கொண்டல்-இளவெப்பம் கொண்டு வீசுவது உலவை-உலாவுதலுடையது கோடை-மலைக்கோட்டிலிருந்து வீசுவது ஊதை-ஊதும் ஓசையுடன் வீசுவது வங்கூழ்-உயிர்க்கு உண்வு போன்றது ஒலி-ஒலிப்பது சதாகதி-எப்போதும் வீகவது உயிர்ப்பு-மூச்சுவிடக்கரணியமாவது அசி-அழிப்பது - கந்தவாகன்-மனத்தைச் சுமந்துசெல்லும் ஊர்தியாவது பிரபஞ்சணன்-உலகை இயக்குவது சலனன்-அசைந்தியங்குவது

  1. 18

·志