பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி - சூடாமணி செய்யுள்-60 60. தாவங்காட் டழலத் தீயைத் தருகோலே ஞெலிகோ லென்ப; தீவிகை, தீபம் மற்றைத் - திகழ்சுடர், ஒளி, விளக்கே; ஆவிது பம்,து மத்தோ டரி,புகை; பொறிபு, லிங்கம், பாவக னம்,தீத் தெய்வம், - பாரியே சுவாகா தேவி= டிெ, பொ. விளக்கம் : தாவம்-தாவி எரிவது - ஞெலிகோல்-தியை உண்டாக்கக் கடையும் கோல் தீவிகை-தி செலுத்தும் ஒளியை உடையது தீபம்-தி தரும் விளக்கம் சுடர்-ஒளி - - விளக்கு-விளக்கத்தைத் தருவது ஆவி-கொதிநீரினின் றும் மேலெழுவது து பம்-புகை - துமம்-புகையொழுங்கு; அரி-வெப்பத்தின் குறி; புகை-எங்கும் புகுவதைக் கொண்டது; தீப்பொறி-நெருப்பினின்றும் பிசிராய்ப் பொறிவது: புலிங்கம்-பூற்காரத்தால் செல்வது; பாவகன்-துய்மையாக்குபவன்; பாட வேறுபாடு: 'பாரியை சுதை சுவாகா -'கதை முன் உரிப்பனுவல்களில் இல்லை. பின் வந்த நாமதீபம் ஆசிரிய நிகண்டில் உண்டு. சில அகரமுதலிகளில் இப்பொருளுடனும் பலவற் றில் மகள் என்னும் பொருளிலும் உண்டு. சூடா. 60இலும் மகள் பெயர். அதன் (சூடா. 181) என்பதன் பெண்பால், மனைவி என்ற பொருள் காணப்படவில்லை. எனவே பின் படி எடுத்தோர் இப்பெயரைச் செருகியிருப்பர். எனவே, ‘கதை' இல்லாத பாடிழ், கொள் ளப்பெற்றது. 131