பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-67 தண்ணவன்-குளிர்ந்த ஒளியின்ை - குரங்கி-குரங்கு உருப்போலும் களங்கம் உடையவன் உலவு-இமகிரணன்- வினைத்தொகை சாந்தம் உற்ற-அமைதி பொருந்திய நிலவு தொடர்ச்சி மதியிராக்கதிரேயிந்தும்ருவுதானவனேயல்லோன் விதுவொடுகுமுதநண்பன்சுதாகரன்வேந்தனாலோன் சிதைவிலாமுயலின் கூடுபசுங்கதிர்த்தேவென்றெல்லாம் புதியசந்திரன் மூவேழுமெட்டுமேபுகன்றநாமம் 67 மதி.இராக் கதிரே இந்து, மருயுதா னவனே அல்லோன், விதுவொடு குமுத நண்பன், சுதாகரன், வேந்தன் ஆலோன், சிதைவிலா முயலின் கூடு, பசுங்கதிர்த் தேஎன் றெல்லாம் புதியசந் திரன்மூ வேழும் எட்டுமே புகன்ற நாமம். பெ. பொ. விளக்கம்: சந்திரன்-இரவை ஒளியால் ஆளுபவன் மதி (அளப்பது)-காலத்தை வரையறுப்பது இராக்கதிர்-இரவிற்குரிய ஒளிக்கதிர்களை உடையவன் இந்து-குளிர்ந்த கதிர்களால் நன்னப்பவன் தானவன்-ஒளியைத் தானமாகத் தருபவன் அல்லோன்-இரவுப் பொழுதிற்கு உரியவன் விது-தேவர்களால் நீராகப் பருகப்படுபவன் குமுத நண்பன்-மலர்த்துவதால் குமுதத்திற்கு நண்பன் சுதாகரன்-அமூதக் கதிர்களை உடையவன் வேந்தன்-வான உலகில் இரவு இரசன்