பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-70 வியாழன், வெள்ளி திதிலாத்தெய்வமந்திரிசிகண்டிசனமைச்சன்சீவன் வேதனாண்டளப்பானாசான்வேந்தன்பொன்வியாழன்பேராம் ஒதியவசுரமந்திரியுசனன்பார்க்கவனேசுங்கன் கோதில்சுக்கிரன்பளிங்குபுகர்கவிமழைக்கோள்வெள்ளி 70 தீதிலாத் தெய்வ மந்திரி, சிகண்டிசன், அமைச்ச்ன், சீவன், வேதன்,ஆண் டளப்பான், ஆசான், வேந்தன்,பொன், வியாழன் பேராம் ஒதிய அசுர மந்திரி உசனன்,பார்க் கவனே, சுங்கன், கோதில்சுக் கிரன்,ப எளிங்கு, புகர்,கவி, மழைக்கோள், வெள்ளி. பெ. பொ. விளக்கம்: வியாழன்-மஞ்சள் நிறம் உடையவன் தெய்வமந்திரி-தேவர்களுக்கு அமைச்சன் சிவன்-உயிரன் ஆண்டளப்பான்-ஆண்டுகளை அளப்பவன் பொன்-பொன்னிறம் உடையவன் வெள்ளி-(மற்றைகளினும் சற்று) வெண்மையானது. உசணன்-அசுரர் மேன்மையை வளர்ப்பவன் பார்க்கவன்-பிருகு வயிற்றில் பிறந்தவன் சுங்கன்-தேவரைக் கீழறுப்போன் சுக்கிரன்-வெண்ணிறம் உடையவன் பளிங்கு-பளிங்கு நிறத்தவன் புகர்-புள்ளியாய்த் தோன்றுபவன் கவிடகவியின் மகன் மழைக்கோள்-மழைக்குரிய கோள். கோது-இல்=குற்றம் இல்லாத