பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியது; 'சடசட' அருவியாக விழுந்தது. இவ்வோட்டத்தைக் கூர்ந்து கண்ட மலை மாந்தன் இந்நீரோட்டப் போக்கோடு அது எங்கு போகிறது எனக்கான அவ்வழியே வழியாய் நடந்தான்; இறங்கினான். மலையடிவாரத்தை அடைந்தான். கற்பாறைகள் குறைந்து, தான் தரித்து நிற்கும் தரைமட்டம் கண்டான். செடி, கொடி, மரம் கண்டான். முரண்படாத விலங்குகளை இணைத்துக்கொண்டு முதல் நிலை அமைப்பான வாழ்வைத் துவங்கினான். இந்நிலம் வலிய மலை நிலத்திற்கும் மெலிய வயல் நிலத்திற்கும் இடையில் அமைந்ததால் இடைநிலம் எனப்பெற்றது. இவ்விடை நில வாழ்வில்தான் தமிழ் மாந்த வாழ்வியலின் தோற்றுவாய் அமைந்தது எனலாம். இவ்விடை நிலத்திலிருந்து பள்ளம் கண்டு ஓடிய நீரோட்டமே வழியாக -ஆறாக (ஆறு-வழி) மென்னிலமான வளங்கொண்ட நிலம் அடைந்து கழனி பெருக்கி நாகரிக வாழ்வைத் தொடங்கினான். 'ஆற்றங்கரை நாகரிகம்’ முளைத்தது. நாகரிகத்தின் நாடி இங்குதான் துடிப்பு கொண்டது. தொடர்ந்து ஆற்றின் வழியே கொண்டு கழிமுகப்பகுதி கண்டு, பெரும் நீர்ப்பரப்பாம் கடலைக் கண்டான். மணல்வெளியில் குடியிருப்புகள் படைத் துக்கொண்டு நெய்தல் வாழ்வு கண்டான். உப்பு கண்டு சுவை படைத்தான். கடற்பொருள்களை ஈட்டினான். மிதப்பு முதல் கலம் வரை கண்டு கடல் ஓடினான். கடல் கடந்து பல்பொருள் ஈட்டினான். இவற்றையெல்லாம் பொதிந்துள்ளவை தமிழ் இலக்கிய இலக்கண நூல் களே. இவை இலக்கிய, இலக்கண நெறிகள் மட்டுமோ? நிலவியல் துணுக்கம் இல்லையோ? உடலியல், உணர்வியல், உயிரோட்டம் ஊரவில்லையோ? வாழ்வியல் வரலாறு கிளைத்து நாகரிக நாடி பேசவில்லையோ? உலகில் புதுமை அறிவியல் தோன்றிய தொடக்க காலத்திற்குப் பற் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச் சான்றோரால் வடிக்கப்பெற்றது இந்நிலப் பாகுபாடு. இதன்படியும் இப்பூவுலக உயிரின் முதல் தோற்றம் மலைதான். - - - - இவ்வாறு தோற்றுவாய் செய்த முதல் தாய் மலை எது? உலகின் தென்பகுதியில் இன்றைய இந்துமாகடலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நெடும் நிலப்பரப்பு இருந்தது. இது கிழக்கே இன்றைய ஆசுதிரேலியா முதல் மேற்கே ஆப்பிரிக்கா முடிய நீளப் பரந்து கிடந்தது. இப்பெரும் நிலப்பரப்பை ஆய்ந்த மேலை அறிஞர் எக்கெலும் 17 à-a-3