பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-74 விண்மீன்களின் பெயர்கள் குதிரைநாள் (அச்சுவினி) அடுப்புநாள் (பரணி) பரிமருத்துவநாள்வாசிபரவுமைப்பசியாழேறோ டிரலையேமுதனாள்சென்னியென்பதச்சுவினியின்பேர் பரணியேகிழவன்சோறுபகலவன்றராசுதாழி தருமனாளடுப்புபூதந்தாசிமுக்கூட்டுத்தானே 75 பரி, மருத் துவ நாள், வாசி, பரவும் ஐப் பசி, யாழ்,ஏறோ டிரலையே முதனாள், சென்னி என்பதச் சுவினி யின்பேர்; பரணியே கிழவன், சோறு, - பகலவன், தராசு, தாழி, தருமனாள், அடுப்பு, பூதம், தாசி,முக் கூட்டுத் தானே. பெயர்ப் பொருள் விளக்கம்: அசுவினி-குதிரை முகம் போன்றது பரி-குதிரை முக வடிவம் உடையது மருத்துவ நாள்- மருத்துவத்திற்குரிய விண்மீன் வாசி-குதிரை முக வடிவு உடையது ஐப்பசி-ஐப்பசிக்குரிய நாள் யாழ்-யாழ் போன்றது ஏறு-ஆண் குதிரை முக வடிவினது முதல்நாள்-27 நாள்களுள் முதலில் எண்ணப்படுவது இரலை-ஊது கொம்பு போன்றது . சென்னி-தலை என்னும் முதன்மை குறிக்கும் முதஸ் நாள் பரணி-(அடுப்பு) அடுப்பு போன்றமைந்தது கிழவன்-தலைவனாக்கும் நாள் சோறு-தன்னில் பிறந்தார்க்கு ஊட்டமாகும் நாள் பகலவன்-பகலவன் விருப்பு நாள் தராசு-நடுநிலைநாள்