பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Hegel) காட் எலியட்டும் (Scott Eliet) இப்பகுதிக்கு இலெமூரியா (Lemuria) என்றும், காண்டுவானா (Gondwana) என்று பெயரிட்டனர். இலெமூர் (Lemur) என்றொரு குரங்கினம். இவ்வினம் மாந்தரினத்திற்கு அணுக்கமான தோற்றம் கொண்டது. இப்பகுதியில் இவ்வினம் வாழ்ந்ததை ஆய்வால் கண்டறிந்து 'இலெமூரியா' என்று பெயரிட்டனர். தற்போதும் 'மூழ்கிய இலெமூரியா என்கின்றோம். இப்பெரும் பகுதியில், இன்றைய நம் தமிழ்நாட்டினை ஒட்டித் தெற்கில் குமரி என்றொரு ஆறு ஓடியது. அதற்கு நெடுந்தெற்கில் பஃறுளியாறு என்றொரு ஆறு ஓடியது. இவற்றிடையே குமரி மலை என்றொரு மலையும் இருந்தது. இவற்றை நம் இலக்கியங்கள் குறிக்கின்றன. (இப் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.) இவ் விரண்டு ஆறுகளின் இடைப்பட்ட பெருநிலப்பகுதியே குறிக்கத்தக்க மிகத் தொன்மை நிலம். இந் நிலம் வெறும் நிலம் என்று மட்டும் அன்றி வரை யறுக்கப்பெற்ற ஒரு பெரும் -மிகப் பெரும் தேயம். இதில் 7 பெரும் நாடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஏழு ஏழு நாடுகளைக் கொண்டதாக 49 நாடுகள் அமைந்திருந்தன. அவை, ஏழ் தெங்க நாடு, ஏழ் மருத நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகாரை நாடு, ஏழ் குறும்பனை நாடு எனச் சிலப்பதிகார உரை விளக்கம் அறிவிக்கின் றது. முன்னிருந்த இவ்வரலாற்றைக் கண்டறிந்து எடுத்து மொழிந்த அடியார்க்குநல்லார் என்னும் உரையாசிரியர் நன்றிக்கு உரியவர். இவற் றுடன் குமரி, கொல்லம் முதலிய பல மலைகளைக்கொண்ட நாடுகளும், காடு களும், பல ஆறுகளும் இருந்தனவாக அவரே எடுத்து மொழிந்துள்ளார். இப்பெயர்களை நோக்கினால் குன்றம் (குறிஞ்சி), பல காடுகள் (முல்லை), மருதநாடு (மருதம்) இரு பாலை எனத் தமிழ்நிலப் பாகுபாட்டுப் பெயர்கள் பேசுகின்றன். - இந்நிலத்தின் நீட்சி எழுநூற்றுக் காவதம் (காவதம்-பத்து கல்) அஃதாவது ஏறத்தாழ 11,265 கிலோ மீட்டர் ஆகும். நாடு நாடாக 49 நாடுக ளைக் கொண்ட பெருநிலமாகையால் ஒரு கண்டம் என்று கொள்ளத்தக்க பரப்பாகும். எனவே இதனைக் குமரி ஆறு, குமரி மலை இவற்றின் குறிக்கத் தக்க அமைப்பு கொண்டு குமரிக் கண்டம் என்கின்றோம். 'கண்டம்' என்பது புது வழக்காயினும் 'குமரி நாடு' என்பது காலங்காண் முடியாத தொன்மையது. - - f - o இவ்வரலாற்றுப் பெயரை அறிந்த மேலை ஆராய்வாளர் பலர் தம் பெரு நூல்களில் குறித்துக் காட்டினர். ' . . . . . . . . .