பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மலையிலிருந்து தலைக்கொண்ட ஆறு குமரியாறு இம்மலைத்தொடரின் நீண்டு பெருகிக் கிடந்ததில், ஆங்காங்கு மேலிடங்களில் கசிந்து கசிந்து சில துளிகளாக ஊறிய நீர் - பல துளிகளாகப் பெருகி, பல்+துளி-பஃறுளி ஆறாகியதைப் “பஃறுளியாறு' என்னும் கரணியப் பெயர் அறிவிக்கின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற கடல்கோள் நம் காலத்திற்கு முன் அண்மை யாகவும், கடல் கோள்களுக்கு இறுதியாகவும் நேர்ந்தது. அதாவது இறுதிக் கடல்கோள், மூன்றாவது கடல் கோளில்தான் குமரிமலை, ஆறுகள், நாடுகள் மூழ்கின. (மேலும் பல கடல்கோள்கள் நேர்ந்தனவாக நிலநூல் அறிஞர் செட்டலியட்டு என்பார் குறித்துள்ளார்.1 - இவ்விறுதிக் கடல்கோள் நேர்ந்தது எப்போது? இக்காலத்தைத் தெளிவாக்கிக் கொள்ளத் தமிழ்ச் சான்றுகள் அணுக்க மாக இல்லை. ஆயினும் கி. மு. வில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நேர்ந்திருக்கலாம் என்று கருதலாம். ஆனால், மேலை பறிஞர் பிளினி வரலாற்றில் இது நிகழ்ந்தது கி. பி. 79 ஆகட்டு 23, 24ஆம் நாள்களில் என்று துல்லியமாகக் குறிக்கப்பெற்றுள்ளது.* எந்த அளவில் இது பொருந் தும் எனும் ஐயத்திற்குப் பிளினியின் காலம் உறுதிவாய்ந்த ஐயத்தை எழுப்பு கின்றது. பிளினி கி. பி 23இல் பிறந்து கி. பி. 79இல் புகழுடம்பு எய்தினார் என்பது வரலாறு. அவர் வாழ்வு 79இல் முடிகின்றது. முடிவுறும் ஆண்டாம் 79இலேயே இக்கடல்கோள் நேர்ந்ததாக எழுதப்பட்டிருப்பது நம்பிக்கையை நடுங்கவைக்கின்றது. இக்கடல்கோளின் காலத்தை உறுதிசெய்ய வகையில்லையாயினும் இக் கடைக்கோள் குமரி மலையை மூழ்கடித்தது உண்மை. இதனை அறியும் போதே இதற்குமுன் நேர்ந்த இரண்டு கடல்கோள்களில் இம்மலை மூழ்காது நிலைத்திருந்தது என்பதையும் உணரலாம். அக்கடல் கோள்களில் இம்மலை தாக்கம் பெற்றதாகவோ மறைந்ததாகவோ எக்குறிப்பும் கொள்ளமுடியாது. 29 பிளினி பக், 49-மேற்கோள் நூல் தாலமி பக். ேே 2.É.