பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுத் ஆடாமணி செய்யுள்-90 இரவு. பகல் அல்விபாவரியேகங்குல் அல்கல்யாமினியேநத்தம் எல்லியோடியாமமாலைஇரசனிநீசியிராவாம் எல்லோடுதிவாப்பகற்பேரேல்வையேதிவகம்வைகல் அல்கலேதினமேயெல்லையானியம்பகலே நாளாம் 90 அல்,வியா வரியே கங்குல் அல்கல்,யா மினியே நத்தம் எல்லியோடியாமம், மாலை இரசனி, நிசி,இ ராவாம் எல்லோடு திவாப்ப கற்பேர் ஏல்வையே திவசம், வைகல் அல்கலே தினமே எல்லை ஆனியம், பகலே நாளம் பெ. பொ. விளக்கம்: இரா-இன்பம் கொடுப்பது அல்-ஒளியற்றது விபாவரி, திங்கள் உடு முதலியன ஒளிர்தலை உடையது கங்குல்-இரவின் எல்லைப் பரப்பு அல்கல்-மக்கள் இயங்காமல் தங்குதற்கு உரியது யாமினி-யாமங்களை உடையது நத்தம்-ஒடுங்குதற்குக் கரணியமானது எல்லி-ஒளியுடைய கதிரவனைத் தன்னுள் கொள்வது யாமம்-இரவுப்பொழுதுகளை உடையது மாலை-பொழுது மயங்கிய இருளைத்தருவது இர.நிசி-பாலுணர்வுச் சுவையை உண்டாக்குவது நிசி மக்களது இயக்கத்தைக் குறைப்பது பகல்-நாள் பகுக்கப்பட்டது எல்-ஒளி உடையது திவா-பகல் ஒளி உடையது தினசம்-ஒளியுடையது . வைகல்-முக்கள் தங்கி வாழ்தற்குக் கரணியமானது.