பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானத்தில் தோன்றும் பிறைத்திங்கள் இருபக்கம் கூர்மையான முனையு டன் காட்சியளிக்கும். இரண்டில் வடபுற முனை (கோடு) கொம்பு போன்றது. தென்புற முனையும் கொம்பு போன்றது. வடபுறக் கோடு உயர்ந்தாலும் தென்புறக் கோடு தாழ்ந்தாலும் பிறைக்கு ஒன்றும் தாக்கம் இல்லை என்று பிறைக்குச் சிறப்பு சொல்லப்பட்டதுதான். ஆயினும், இவ்வரி ஒரு நினைவை அழைத்துவந்து நம்முன் நிறுத்துகின்றது. - நிற்கின்ற நினைவு என்ன? சற்று ஆழமான நினைவு அது. அது நிலவியல் வரலாற்றுக் காலூன்றி வழக்காற்றுக் கைவிசி நிற்கும் நினைவு. - - காலப்பாகுபாட்டில் நடு நிலக்கரிக்காலம் என்பது ஒன்று, கால வெள்ளத்தில் இது இடைநிலைக்காலம். இக்கால இறுதியில் ஆசியாவின் மையத்தில் ஒரு கடல் உண்டானது. மைய ஆசியாவில் அமைந்ததால் மைய நில-மத்தியதரைக்கடல் எனப்பெயர் பெற்றது. நிலவியலார் இதனை "(டெ)தெதிசு (Tethys} என்பர். இக்கடலின் மையத்தில் நேர்ந்த அரிப்பு அழுத்தம், ஆழ்செயல் ஆகியவற்றால் இமமலையும் ஆல்பகம் தோன்றின என்பர் நிலவியலார். இந்த நினைவு வரலாற்றுக்கால். பட்டினத்தார் பாடலுக்குள் இவ்வாறும் பொருள்கொள்ள இப்பகுதி நிலவியலில் நேர்ந்ததைக் குறிக்கும் வழக்காறு இடம் கிடக்கிறது. அஃதாவது - . - - - . வட கோடு (கோடு-ம்லை) என்னும் இம்மலை உயர்ந்து எழுந்து தோன்ற - - - - . . . . . . . . - தென்கோடு என்னும் குமரி மலை தாழ்ந்து மூழ்கியது என்பதாகும். - இது வழக்காற்றுக் கை வீச்சு - இதன்படியும் குமரியின் முதன்மை புலனாகும், மற்றும், - ... -- 30 தி, என், முத்துசாமி: கலைக்களஞ்சியம்-8 பக். 182 23.