பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-110 மூத்தோன், சிறந்தோன் குரவனையன்சுவாமிகோமானேயடிகளத் தன் பரவிபவுரவோனிசன்பதியிறைமூத்தோன்பேராம் குரிசிலோடண்ணலேந்தல்கூறியதோன்றல்செம்மல் பெருமையிற்சிறந்தோனென்றுபேசினர்.மாசினுலோக் 110 குரவன்,ஐ யன்,சு வாமி கோமானே அடிகள், அத்தன் பரவிய உரவோன், ஈசன் பதி,இறை மூத்தோன் பேராம் குரிசிலோ டண்ணல், ஏந்தல் கூறிய தோன்றல், செம்மல். பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசில் நூலோர் பே. பொ. விளக்கம்: மூத்தோன்-அறிவு முதலியவற்றால் முதிர்ந்தவன் குரவன்-தந்தை போன்றவன் ஐயன்-தலைவன் சுவாமி-செல்வம் உடையவன் கோமான்-மன்னன் போன்றவன் அடிகள்-வணங்கத்தகும் திருவடிகளை உடையவன் அத்தன்-தந்தை போன்றவன் உரவோன்-அறிவு வலிமை உடையவன் ஈசன்-கடவுள் போன்றவன் பதி-காப்பாற்றுபவன் இறை-மன்னன் போன்றவன் குசிசில்-பற்றுக்கோடானவன் அண்ணல்-எவராலும் அடையப்படுபவன் எந்தல்-தலைமையில் மிக்கவன் தோன்றல்-புகழில் தோன்றியவன் செம்மல்-நடுநிலைமை உடையவன்