பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல். செயல் என்பது செய்’ என்பதன் தொழிற்பாடு. 'செய்’ என்பதுடன் “கை” சேர்ந்து செய்கை ஆகும்; "செய்’ என்பதற்குரியதால் கைக்கே செய்” என்னும் சொல் உண்டு. அத்ன் அடையாளத்தை இன்றும் தமிழின் வழி மொழியாகிய தெலுங்கில் காண்கிறோம். (தெலுங்கில் செய்-கை கை செய்த பேச்சே முதல் மொழி. இது சேப்கை மொழி-சைகை மொழி (Gesture Language) எனப்பெற்றது. (சிவம் சைவம் ஆனது போன்றும் பித்தம் பைத்தியம் ஆனது போன்றும் செய்கை சைகை ஆயிற்று) ' வையம் ஈன்ற தொன்மக்கள் உணத்திணை கையினால் உரை காலம் ” என்று நம் காலத் தமிழ்ப் பேரறிஞர் தஞ்சாவூர் பள்ளியக்கரையகரம் திரு நீ. கந்தசாமி பிள்ளையவர்கள் கையினால் உரைக்கும் மொழி' என்று பாடினார் கள். இன்றைய நிலையிலும்-மொழி வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய நிலையிலும் -வாயால் பேசிக்கொண்டே கையால் குறிகள் காட்டுகின்றோம். வா’ என்று வாயால் அழைக்கும்போது தம்மை அறியாமல், தேவையில்லாமல் உள்ளங்கையைக் குவித்துக் கலித்து, வளைத்து அசைத்துச் சைகையும் காட்டு கின்றோம். 'உண்டாயா என்று வினவும்போது ஐந்து விரல்களின் முனைக ளைக் கூட்டி உதட்டில் வைத்துக் காட்டுகின்றோம். இவ்வாறு பலவற்றைச் செய்வதை அறிவோம் இவை இன்றைய மொழிக்கு மூல மொழி-முதன் மொழி-சைகை மொழி என்பதை அடையாளம் காட்டுவனவாகும். மற்றும், சைகைக் கொள்கை (Gesture Theory) 'கையால் சைகை காட்டும்போது ஏற்படும் மன உந்துதலால் நாக்கு அதற்கேற்ப அசைந்து அசைந்து, பிறழ்ந்து ஒலிப்பதே மொழி” என்பதையும் இணைத்து நோக்கி னால் வாய் உண்டாக்கும் மொழிக்குச் சைகைமொழி துரண்டுகோலாகிறது. மேலும் ஒன்றை இணைத்து நோக்கவேண்டும். மொழி வளர்ச்சி என்பது எழுதிக்காட்டும் வரிவடிவில்தான் நிறைவு பெறுகிறது. அவ்வரி வடிவத்தை வரைவது கை. எனவே, சைகை, துண்டுதல், வரைதல், ஆகிய இயக்கங்களால் கைதான்-கையால் மெய்தான் மொழிக்கு முதல் உறுப்பு ஆகிறது. சைகை மொழிதான் முதன்மொழி, இரண்டாவதாக வாய். இது முன்னர் விளக்கியமை போன்று உணர்ச்சி களின் வெளிப்பாடான ஒலிகளை எழுப்பியது. அவ்வொலிகளின் தொகுதியே மொழி. வெறும் ஒலித்தொகுதி மொழி ஆகாது. எழுந்துவரும் ஒலிக்கூற்றின் வன்மை, மென்மை, இடைமை ஒலியாகும்போது நிகழும் எடுத்தல், படுத்தல்,