பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-123 படைத்தலைவர் நிமித்திகன் கணக்கர் வழியினர். பரிவாரம் பெருகியபொருநன்சேனாபதிபடைத்தலைவன்பேரே வருநிமித்திகன்பேர்சாக்கைவள்ளுவனென்றுமாகும் கருதுகாவிதியரென்பகணக்கர்தமவழியினுள்ளார் பரவியபரிவாரப்பேர்பரியாளமென்னலாமே 123 பெருகிய பொருநன், சேனா பதிபடைத் தலைவன் பேரே வருநிமித் திகன்பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் கருதுகள் விதியர் என்ப கணக்கர் தம் வழியில் உள்ளார் பரவிய பரிவா ரப்பேர் பரியாளம் என்னல் ஆமே பெ. பொ. விளக்கம்: பொருநன்-ஒத்த வலிமை உடையவருடன் போரிடுபவன் சேனாபதி-(சேனை-பதி) படைத்தலைவன் நிமித்திகன்-வருவது உரைப்போன் *சாக்கை (உசா-கை)-உள்ளார்ந்த கருத்துக்கள் உசாவப்படுபவன் வள்ளுவன்-முன்கூட்டிக்கருத்தறிவிக்கும் அறிவு வளம் உடையவன் கணக்கர் தம் வழியின் உள்ளோர்-அரசர் ஆனை ஓலை எழுதுபவரின் துணையாளர் காவிதியர்-காவிதிப்பட்ட்ம் உடையவர் பரிவாரம்-அரசனை ஆட்சித் துணைக்குச் சுற்றிச் சூழ்ந்திரும்போர் பரியாளம்-சூழ்ந்து நிற்கும் குழு عقعهثة من - جخلگ_:_: ------ ----- ---------------------------------------- --------------------- - - - - - - - - - حســــــنشظسه பாடவேறுபாடு

  • உசாக்கை சாக்கை ஆகியது என்பார் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்.