பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-143 தோழன், தோழி இருபால் முன்னிலை சிலதனேநண்பன்பாங்கன்சேடனே துணைவன்தோழன் எலுவனுமாமிவன்முன்னிலைப்பெயரேடாவென்ப சிலதியேசகியேபாங்கிசேடியேஇகுளைதோழி நலமுறுமுன்னிலைப்பேர்நாடின்மற்றேடியெல்லா 143 சிலதனே நண்பன், பாங்கன் சேடனே துணைவன், தோழன் எலுவனும், ஆம்இ வன்முன் னிலைப்பெயர் ஏடா என்ப சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை, தோழி நலமுறு முன்னி லைப்பேர் நாடின்மற் றேடி, எல்லா பெ. பொ. விளக்கம்: தோழன்-துணையானவன் சிலதன்-சிற்றுதவிகள் செய்பவன் பாங்கன்-பக்கத்தவன் சேடன்-அனுப்பப்படுபவன் எலுவன்-தோழமை உடையவன் தோழி-தோழன் பெண்பால் சகி-கூட நிற்பவள் இகுளை-நெருக்கமானவள் முன்னிலை-தன்முன்னே விளித்து நிலைப்படுத்துவது சடா-அன்பை ஏற்பவனே ஏடி-ஏடா பெண்பால் எல்லா-அன்பொளியானவள் 342.