பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியீட்டாளர் முகவுரை صمحتصميم متحجيم محمد. பைந்தமிழ்ச் சுவடிகள் உள்ளிட்ட பன்மொழிச் சுவடிகளின் கருவூல மாகச் சரசுவதி மகால் நூலகம் திகழ்கின்றது. இந்நூலகத்தை அணிசெய்யும் சுவடிகளை அடிப்படையாகக்கொண்டு இலக்கணம், இலக்கியம், சமயம் மருத்துவம், சோதிடம் முதலிய பொருண்மைகளில் அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் அரும்பணி இந்நூலகத்தால் தொடர்ந்து ஆற்றப் பெற்று வருகின்றது. - இவ்வரும்பணியின் வரிசையில் தமிழ் நிகண்டு நூல்களுள் ஒன்றான 'சூடாமணி நிகண்டு (முதன் மடலம்) தற்பொழுது பதிப்பித்து வெளியிடப் பெறுகின்றது. - தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, நாமதீப நிகண்டு முதலிய பல நிகண்டு நூல்கள் தோன்றி யுள்ளன. இவற்றுள் ஒன்றான 'சூடாமணி நிகண்டு மண்டல புருடர் எனும் புலவர் பெருமகனாரால் இபற்றப்பெற்றதாகும். இன்றைய அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்த நூல்வகை நிகண்டுகளாகும். சொற்களஞ்சியங்களாகவும் சொற்பொருட்களஞ்சியங் களாகவும் துலங்கும் இந்நூல்கள் மொழிவளத்திற்கும் மொழிவளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுகின்றன. இங்குப் பதிப்பித்து வெளியிடப்பெறுகின்ற 'சூடாமணி நிகண்டு-- முதன் மடலம்', சூடாமணி நிகண்டின் பன்னிரு தொகுதிகளில் முதல் இரு தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இப்பதிப்பு, சூடாமணி நிகண்டின் தேவப்பெயர்த் தொகுதியையும், மக்கட்பெயர்த் தொகுதியையும் ஆய்வுப் பதிப்பாக வழங்குகின்றது. இந்நூலினை ஆராய்வுரை, பெயர்ப்பொருள் விளக்கம், பிற நிகண்டுக ளோடு ஒப்பிட்டுக்காட்டும் பகுதிகள், சொற்பாகுபாடு, அகர நிரல்கள் முதலிய