பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் - செய்யுள்-149 கொடையாளன் எல்லையின்றிக் கொடுப்பவன் ஏற்போன் புரவலனிகையாளன்போற்றும்வேளாளன்றியாகி உரைகெழுவேள்வியாளனுபகாரிகொடையுளோனாம் வரைவறக்கொடுத்தளிப்போன்வள்ளியோனென்றுங்கூறும் இரவலன்பரிசிலாளன்யாசகன்றினனேற்போன் 149 புரவலன் ஈகை யாளன் போற்றும்வே ளாளன். தியாகி உரைகெழு வேள்வி யாளன் உபகாரி கொடையு ளோனாம் வரைவறக் கொடுத்த ளிப்போன் வள்ளியோன் என்றும் கூறும் இரவலன் பரிசி லாளன் யாசகன், தீனன் ஏற்போன் பெ. பொ. விளக்கம்: கொடை உளோன்-கொடுக்கும் மனம் உள்ளவன் புரவலன்-புரத்துயில் வல்லவன் (நச்சர்) ஈாையாளன்-இல்லார்க்கு ஈயும் ஆண்மையுடையவன் வேளாளன்-உழைத்து வழங்குபவன் தியாகி-(பொருளைப் பிறரிடம்) விடுதல் உடையவன் வேள்வியாளன்-கொடையை விருப்பமாகக் கொண்டவன் உபகாரி-பிறர்க்குத் துணை நிற்பவன் - வரைவறக்கொடுத்தளிப்போன்-எல்லையின்றிக் கொடுத்துக் காப்பவன் வள்ளியோன்-வள்ளல் ஏற்போன்-கொடுப்பவரிடமிருந்து ஏற்றுக்கொள்வதில் வல்லவன் இரவலன்-தாழ்நது பெறுவதில் வல்லவன் (நச்சர்) பரிசிலாளன்-பெற்ற பரியப்பொருளைக் கையாள்பவன் பாசகன்-பணிந்து நின்று பொருள் கேட்பவன் தீனன்-பொருள் கேட்பதில் தாழ்ந்து நிற்பவன்