பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்' என்பது தொடக்கமாக 'சொல் இறையாக இருந்தது. 'சொல்லே இறை' ೯ Tುಣ தொடராக 'ஆதி சிவன் பெற்றுவிட்டான்' என்பது இறுதியாக எழுந்தன எல்லாம் ஆய்வில் எடுத்துக்கொள்வதற்கும்-ஏன்-அறிவின் முனைப்பில் கொள்வதற்கும் பொருந்துவனவாயில்லை. ஒன்று தன் மொழியை உயர்த்திக் காட்டல், இரண்டு தம் சமயக் கடவுளுக்குத் தனித்தன்மை ஏற்றல், பொதுவில் மொழிக்கு (வேண்டாத) பெருமை கூட்டல் எனத்தான் கொள்ளவேண்டியுள்ளது. இவை யாவும் ஒட்டுமொத்த மொழி வரலாற்றின் பிறப்புபற்றிய கருத்து நோய் ஆகும். - இவ்வாறு பல கருத்துக்களால் மொழிப் பிறப்பிற்கு எழும் முரண்பாடு களே இக்கருத்து நோயைக் கலகலக்கச் செய்கிறது. மேலும் இக்கருத்து நோய்க்குத் தொடக்க மருந்தாக, கடவுளியர் கூற்றுக்களையே கொடுக்கலாம். கடவுளியரே, 'மாந்தனைக் கடவுள் படைத்தார்; மாந்தன் கடவுளுக்குப் பெயர் வைத்தான் என்று பெயர் சூட்டும் மொழிப்படைப்பை மாந்தனுக்குத் தந்தனர். 'கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்' என்று தாம் படைத்த தமிழைத் தாமே ஆய்ந்தார் என்று எல்லாம் வல்ல கடவுளையே மறு ஆய்வுக்காராக ஆக்கினர். இவை போன்ற மிகப்பிறவற்றை யும், கருத்து நோய்க்குத் தொடக்க மருந்தாகக் கொள்வதில் தவறில்லை. தீர்வு மருந்தாக, தமிழறிஞர் திரு வையாபுரிப் பிள்ளையவர்கள் கருத் தைக் கொடுக்கலாம். - ೧.or¢ಹಷ್ರ கடவுளாலும் முனிவர்களாலும் படைக்கப்பட்டன என்று கருதுதல் நமது தெய்வ பக்தியைக் காட்டுமே தவிர உண்மையை உணர்த்துவ தாகாது” என்றவர், இக்கருத்து எத்தகைய பயனுள்ளது என்பதையும். 4Q即