பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இவை போன்ற கூற்றுக்களாலும் கொள்கைகளாலும் விளைந்துள்ள திமைகள் மிகப் பல” என்றும் பதிந்துள்ளார். இப்பதிவு கருத்துநோயைக் குணப்படுத்தும் நன் மருந்து. முடிவாக இயற்கைத் தோற்றங் கொண்டதே மொழி என்று கொள்ள வேண்டும். முதல் மாந்தனின் தோற்றம் குமரிக்கோடு எனக் காணப்பட்டது. அவ் வினம் மலையிலிருந்து இறங்கிப் பரந்த வாழ்வைக் கண்டது. பரந்து கிடக்கும் இலப்பகுதியைக் காணும் அவாவால் கிழக்கிலும் மேற்கிலும் முதலில் பரவத் தொடங்கிற்று. - உயிரியலின் ெ தாடக்க ஆய்வாளர்கள். 'ஆதார மொழியைப் பேசிய மக்கள் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிந்து ஒரு பிரிவினர் கிழக்கேயும் மற்றொரு பிரிவினர் மேற்கேயும் பரவியிருக்கவேண்டும்' என்று கண்டனர். இக்கருத்து, கிழக்கு மேற்குக்கு மையமாக ஓரிடத்தை முதல் மாந்த இனத்தின் தோற்ற இடமாக அடையாளம் காட்டுகின்றது. நிலக்கோளத்தின்படி இம் மைய இடம் குமரிக்கோடுதான். - * இதற்கு மேலும் வடக்கு நோக்கியும், வடமேற்கு, வடகிழக்கு நோக்கி யும் அப்பரவல் நேர்ந்திருக்க வேண்டும் என்பதே இயல்பாக நிகழக் கூடிய தாகும். . . . இக்கால ஆய்வுகளும் இதற்குச் சான்று கூறுகின்றன. கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆ. சதாசிவம் தரும் சான்றுக் குறிப்பு: 'அண்மைக்கால ஆராய்ச்சிகளின் இந்திய சரித்திரத்தில்-ஒரு பகுதியில் விளங்கிய குமரிநாடு இந்தியா, இலங்கை என்பனவற்றை உள்ளடக்கிய நீண்ட ஒரு கண்டம் என்றும், கடல்கோள்களால் அந்நாட்டு மக்கள் வடக்கே சென்று 'குமரி எனப்படும் 'சமர் நாட்டிலும் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் கி. மு. 4000ஆம் ஆண்டுக்கு முன்னரே பழந்தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டி விட்டனர் என்று கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன’ அகழ்ந்து காணப்பெற்ற மொகஞ்சதரோ, ஆரப்பாவிலும் இக்கருத்துக் குதவும் சுவடுகள் காணப்பட்டுள்ளன. - - 39. எசு. வையாபுரிப்பிள்ளை; சொற்கலை விருந்து பக். 16 40. எம். எசு. துரைசாமி கலைக்களஞ்சியம் 8 பக், 548 4] ਾਂ