பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-169 வடசொற்கள்: கிராதர், வனச்ரர், சவரர், பாவமூர்த்திகள் மணிப்பவளச் சொற்கள் : முல்லை நிலத்தவர் முல்லையர்பொதுவாண்டர்முந்துகோவிந்தரேயான் வல்லவர்குடவர்பாலர்மதித்தகோவலர்கோபாலர் சொல்லியவமுதராயர்தொறுவரேயிடையரென்ப முல்லையின் மாக்கள்பேர்தாமுந்நான் குமொன்றுமாமே 170 முல்லையர், பொதுவர், அண்டர் முந்துகோ விந்த ரேஆன் வல்லவர், குடவர், பாலர் மதித்தகோ வலர்கோ பாலர் சொல்லிய அமுத ராயர் தொறுவரே இடையர் என்ப முல்லையின் மாக்கள் பேர்தாம் முந்நான்கும் ஒன்றும் ஆமே. பெ. பொ. விளக்கம் : முல்லையர்-காடு காடுசார்ந்த முல்லை நிலத்தவர் பொதுவர்-நானிலத்திற்கும் பொதுவானவர் அண்டர்-அணுக்கமாக வாழ்பவர் - கோவிந்தர், ஆன்வல்லவுர்ஆ இனங்களைக் காப்பவர் குடவர்-ஆன் நிரைகளை உடையவர் (மேற்கு மலையடிவாரத்தவர்) கோபாலர், பாலர்-ஆவினங்களைப் பாதுகாப்பவர் அமுதர்-பால்(அம்மம் என்னும் அமுதத்தை உடையவர் ஆயர்-ஆநிரைகளின் உரிமையானவர் -> தொறுவர்-ஆக்களின் இடமாம் தொழுவைக் கொண்டவர் இடையர்-இடைநிலத்தவர் -- - 4Uş’ சூ - 52