பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பரவலில் மொழிநிலை என்ன? இந்நிலைதான் பலுக்கு மொழியின் பிறப்புக்காலமாக இருந்திருக்க வேண்டும். அது ஒலி வழங்கும் கதிரவனது வெப்ப நிலையாகும். அதனை அண்டிய தட்ப நிலை; அண்டாத தட்ப நிலைகளுமாகும். .. கோளம் பற்றிய அறிவியல் வல்லுநர்களால் நிலக்கோளத்தில் நில மையக்கோடு வகுக்கப்பெற்றுள்ளது. இது கதிரவனின் வெப்பம் நிலத்தின் மேல் விழும் மிகு எல்லைக் களம். இதன் தெற்கும் வடக்கும் கதிர் வெப்பம் படிப்படியாகக் குறையும் களங்கள். தெற்கு வடக்கு முனைகள் வெப்பம் தாக்காத பனிப்படலக் களங்கள். பரவிச் சென்ற மாந்த இனம் இக் கள மாற்றங்களால் அவ்வச் சூழலுக்கேற்ப மாற்றம் பெற்றது. அம்மாற்றம் எவ்வகையது? வெப்பம் தட்பம் இவற்றின் சூழலுக்கு ஏற்ப மாந்தனின் புற அமைப்பு நிறம் மாற்றமடைந்தமை போன்றே உள்ளுறுப்புக்களும் அமைப்பால் மாற்ற மின்றி வேறுவகையில் மாற்றம் கொண்டன. வெப்ப தட்பத்தால் சற்றுச்சற்றே கருங்கவும் உப்பவும் பெறுதல் இயல்பே. ஆனால் எம்மாந்தனுக்கும் மொழிக்கு மூலமாவது உந்துவளி ஒன்றுதான். ஆனால், கதிரவனின் வெப்ப தட்பத் தாக்கத்தால்தான் பல்வகை ஒலிப் பிறப்பு மாற்றங்கள் நேர்ந்தன; பல மொழிகள் உருவாக அவையே கரணியம் ஆயின. தொண்டை முதலியவற்றின் சற்றுச் சற்றே மாற்றத்தாலும் ஒலி வேறுபாடு தேர்ந்தது. வெப்ப தட்பத் தாக்கங்கொண்டு மொழி என்னும் ஒலிக்குத் தாய், ஒளி என்பதையும் உணரலாம். உலகில் பற்பல மொழிகள் தோன்றினும் அவை தனித்தனி மூலமாகத் தோன்றின அல்ல. ஒரு மூல மொழிதான் தாய். அத்தாய் மிகச்சில மொழி களை முதலில் ஈன்றாள். ஒவ்வொன்றும் சில கிளை மொழிகளைத் தோற்று வித்துத்தான் தான் ஒவ்வொரு குடும்பமாகியது. கிளை மொழிகளிலிருந்து சுற்றம் போன்ற மொழிகளும், அக்கிளை மொழி, சுற்ற மொழிகளுடன் கலந்து உறவு மொழிகளும் பல்கின. இவ்வாறாக நூற்றுக்கணக்கில் பின்னர் ஆயிரக் கணக்கில் சொல்லும் அளவு மொழி பெருகியது. இத்துணை மொழிகளுக்கும் ஒலிதான் மூலகாரணம் என்னும் உண்மை வைரக் கல்வெட்ட ாகும். இவ்வாறு பல்கிப் பெருகத் தொடங்கிய குை ఇఙ.29 కెజaుfజీ, .....డగజ - ம்ை முதல் மாந்த இனத்தின் 經