பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கணக்கின்படி திராவிட மொழிகள் 30. இவற்றுள் சில எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் உள்ளவை; சில பேச்சு வழக்குடன் பிற மொழி எழுத்துக் களைக் கொண்டவை (ஆங்கில உரோமன் எழுத்தும் உண்டு); சில எழுத் தற்றவை; பேச்சற்றவை. இவை அனைத்துமே தமிழ் மொழியின் இழையோட்டம் கொண்டவை. எந்த ஒன்றையும் எழுத்துக்கள் வேறுபடினும் பெரும்பகுதி சொல் மூலமும் அவற்றுள் பெரும்பகுதி பொருள் தொடர்பும் தமிழ் இயைபு கொண்டவை. இவற்றுள் பல சமற்கிருதச் சொல் கலந்த வாடையால் சில மாற்றங்களைக் காட்டினாலும் அவற்றின் முதன்மைச் சொற்கள் தமிழின் வேர்ச்சொற்களுடன் ള്ബ്രLങ്ങഖ. இவற்றைத் தமிழின் கிளை மொழிகள் என்று மட்டும் எழுதி முடிக்க முடியாது. இவற்றின் தாய்மொழி என்பதே வைர முடிவு. திராவிடம் என்று எழுதும் கால்டுவெல் அவர்கள் ‘இக்குடும்பம் (திராவிடம்) ஒரு காலத்தில் ஐரோப்பிய ஆசிரியரால் 'தமிழியம் (Temilian) என்று அழைக்கப்பெற்றது’ என்பது கொண்டு இக்குடும்பத்தைத் தமிழ்ப் பெயரால் குறித்ததையும் அறிய லாம். எனவே, இத்தொகுதியை மொழியியலார் 'தமிழ்க் குடும்பம்' என்றே குறியீடு செய்திருக்க வேணடும். செய்யவில்லை. செய்திருந்தால் முறையாக அணுகியுள்ளனர் என்னும் அளவில் ஏற்க லாம். . தமிழ், தன் வழிமொழிகளுக்குத் தாய் என்பது ஒரு தொடக்க உண்மை. இதன் வளர்ந்த உண்மை, உலக மொழிகள் அளவில் மற்றெந்த மொழிக்கும் குறைந்தது அன்று. மற்றெந்த மொழியுடனும் நோட்டத்திற்காக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தனித்தகவு கொண்டது. எனவே, தமிழ் ஒரு தலைக்குடியாகக் கொள்ளப் பெற்று, தமிழம் ஆரியம் சேமியம் துரேனியம் என்று ஆராயப்பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தனிக் குடியாகக் கொள்ளப் பெற்று ஆராயப் பெற்றிருந்தால் அந்த ஆ குதி அளவாவது ஏற்கப் படலாம். இதிலும் பகுதி அளவுதான ாறானால் நிறைவாக