பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பதற்கு என்ன வேண்டும் (?) என்று வியப்புடனோ, வெறுப்புடனோ வினது p : & . هر بیرم به லாம், நிறைக்குக் குறைப்படுவது எது? குறை என்ன: மாந்தனின் தோற்ற கால மொழி எது )ே-அதாவது உலக முது மொழி எது (?) என்னும் ஆய்வு தெளிவாக எடுத்துக்கொள்ளப்பெறவில்லை என்பதே குறைப்பாடு. தெளிவாக எடுத்துக்கொள்ளப்பெற்று உலக முதன் மொழியை அறுதியிட்டு உறுதி செய்யாமல் போனதுதான் குறை. இக்குறைத் குக் கரணியம் தொடக்ககால மொழி அறிஞராகிய-இலக்கண வரையறைசெய்த கிரேக்க அறிஞர் அரிசுடாடில் (Aristotie கி. மு. 384-322) முதல் ஒப்பியல் மொழியறிஞர் மறைத்திரு இராபர்ட்டு கால்டுவெல் (Rev Robert Caldwell 1814-1891) வரை அனைவரும் தமிழில் உள்ள சங்க இலக்கியங்களை அறியாதோர். அறிஞர் அரிசுடாடில் தமிழை அறவே அறியாதவர். அவரைத் தொடர்ந்த பலர் தமிழை அறியாதோர் அல்லது தமிழ் என்றொரு மொழி உள்ளதாக அதனையும் தமிழ் என்னும் பெயரில் அறியாதோர். குறிப்பிடத் தக்க மொழி ஆய்வாளராம் மாக்சு முல்லர் (Max Muller 1823-1900) சமற்கிருதப் புலமை பெற்றவர். சமற்கிருத வரலாற்று நூல் எழுதியவர். தமிழைப் பற்றி ஒரளவான அறிமுக அறிவுடன் நோட்டமிட்டவர். அந் நோட்டமும் சமற்கிருத வழிக்கொண்டதாகும். இவர், ' உலக மொழிகளில் மூன்று தலைக்குடித் தாய்களாகிய துரேனியம் ஆரியம், சேமியம் ஒரே மூலத்தின ' என்றாரேயன்றி எந்த முலத்தின என்று காணத் தவறியவர். - அறிஞர் யெஃச்பர்சன் (Jesperson) போன்றோர் மொழித் தொகுதியைக் கண்டு அமைக்கும் நோக்கத்தினரே அன்றி அனைத்து மொழிகளின் உள் துணுக்கங்களைக் காணாதோர். தமிழ் பயின்று, அறிந்து, பிற மொ! கள் சிலவற்றுடன் தோய்ந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் செய்தவர் அறிஞர் கால்டுவெல். இவர் நன்னூலுக்கு முந்திய இலக்கண நூல் எதையும் காணாதவர். எனவே, தொன்மைச் சங்க இலக்கியங்களை அறியாதவர். இதனாலும், தமிழ் பேசும் தமிழரே மேலை ஆசியாவிலிருந்து தமிழ் நிலத்திற்கு னும் க డ f, இக்கருத்தும் மறைத்திரு சி. பெர்சுவல் என்னும் நூலில் தக்கபடி x-. அனைவரும் தமிழின்