பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிருக்தம் என்னும் நிகண்டுக்குத் தொடர்பான நூலை எழுதிய யாஃச்கர் காலம் கி. மு. 700க்குப்பின் கி. மு. 500க்கு முன்சி என்பது வடமொழியறிஞர் இலட்சுமன் சரூப் கண்டுள்ளதாகும். தொல்காப்பியமோ கி. மு. 3000 ஆண்டு முற்பட்டது. மிகக்குறைவாகச் சொல்வோரும் கி. மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். எவ்வாறு பார்க்கினும் உலகில் மிகத் தொன்மையான தொல்காப்பியம் நமக்குக் கிடைத்து இருக்கும் நூல்கள் அளவில் மிகத் தொன்மையானது. இதற்கு முன்னரும் இலக்கண, இலக்கிய நூல்கள் இருந்து மறைந்த கருத்து உலகறிந்தது. ஆனால், வடமொழி ஆய்வாளர் பலர் தமிழ் நூல்களைப் பின்னுக்குத் தள்ளிப் பேசுவது வாடிக்கை. அக் நிகோத்திரம் இராமாதுச தாதாச்சாரியார் என்பார் முற்போக்கான கருத்துக்களை வழங்கிய வைணவ அறிஞர். இவர் யாஃச்கர் எழுதிய நிருக்தத்தைக் கொண்டு யாஃச்சர்பற்றி, ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சிந்தனையாளர்கள் (மொழியியல் சிந்தனையாளர்கள்) பெருமளவில் பாரத தேசத்தில் இருந்திருக்கி றார்கள். அவர்களுள் யாஃச்கரும் ஒருவர். 'யாஃச்கர் நிருக்தம் அவர் எழுதிய நூல். மொழியியலை வரலாற்றிலேயே முதலாகத் தெரிவிக்கும் நூல்' என்று எழுதியுள்ளார். இவர் ஓரளவில் தொல்காப்பியத்தை அறிந்தவர். இவரே யாஃச்க ருடைய முயற்சியைப்போல் தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் இவைகளில் மொழியியலின் மூலக்கருத்துக்களைப் பார்க்கிறோம் ' என்றும் குறித்துள்ளார். ஆனால் தொல் காப்பியருக்கு 2400 ஆண்டுகள் பிந்தியவராகிய அறிஞர் யாஃச்கரின் நூல் கருத்து முந்தியது என்றமை தொல் என்று எழுதியது அவர் தொல்காப்பியர் காலம் பற்றிய தெளிவான முடிவை அறியாததே ஆகும். - சில தமிழறிஞர்களே தொல்காப்பியத்தைக் கி. பி. 700இற்குப் பின்னர் எழுந்ததாகக் கொண்டனர், இதற்குக் கரணியம் தொல்காப்பியத்தில் உள்ள 49. Lakshman Sarup: The Nigantu and Nirukta P. 54 50. அக்னிகோத்திரம் இராமானுச தாதாச்சாரியார்: யாஃச்கரின் நிருத்தமும் நிகண்டும் முகவுரை பக் 2 5互、 » ※