பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்களால் கொண்ட குறையான ஆய்வாகும். தொல்காப்பியத்தில் வட சொற்கள் விரல் எண்ணிக்கை அளவினதாகலாம். பல இடைச்செருகல்களால் அச்சிலவும் ஏறின. சான்றுக்கு ஒன்று: 'வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல். பொருள். 2ே2) என்

  • * - *... so شمس مماس " سد : rra

றொரு தொல்காப்பிய நூற்பா. இதில் வைசியன் எனபது வடசொல். ഖങ്ങി னைக் குறிக்கும் 'வைசிகன்’ என்னும் இவ்வடசொல் வணிக குடும்ப வரலாற்றுக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் இல்லை; வடசொற் கலப்புள்ள சிலப்பதிகாரத் தில் இல்லை; அதன்வழி வரலாறு கொண்ட மணிமேகலையிலும் இல்லை. சங்க இலக்கியங்களில், 'அறவிலை வணிகன் ஆய் அலன் (132-2) 'வாணிகப் பரிசிலன் அல்லேன்' (208-7) எனப் புறநானூற்றிலும் 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி (120) என்று திருக்குறளிலும் 'வணிகர் புனை மறுகு ஒருசார்' (திரட்டு 1-25) என்று பரிபாடலிலும் வணிக, வாணிக என்பனவே உள்ளன. வைசிகன் இல்லை. ஏலாதி, சிறுபஞ்ச மூலம் முதலிய பதினெண கீழ்க்கணக்குகளிலும் இல்லை. 'வணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்ற தில் வணிகனை வைசிக னாக்கிப் புகுத்தப்பெற்ற வடசொல் கொண்ட இடைச்செருகல் நூற்பாக்களை வைத்து ஆய்வது போன்ற பல தவறான அமைப்பு ஆய்வுகளால் கணிக்கப் பெறும் தொல்காப்பியக் காலம், எவ்வாறு தெளிவானதோ உண்மையானதோ ஆக முடியும். இது போன்ற முடிவைவைத்து யாஃச்கருக்குப் பிந்தியவராகத் தொல்காப்பியர் கூறப்பட்டமை தவறுடையது. எனவே தொல்காப்பியமே முதல் மொமியியல் நூல் எனக்கொள்ளல் வேண்டும். மொழி என்பது முன்னர்ப் பேசப்படுவதற்கும் பின்னர் எழுதப்படுவதற் கும் பின்னர் இரண்டனுக்கும் ஆகியது. பின்னர்ச் சொல்லைக் குறித்தது. சிறப்பாக மொழி இலக்கணத்தையும் மொழி வரலாற்றையும் குறிக்கலாயிற்று. பழைய நூலொன்று நல்லாறன் என்பவரால் எழுதப்பெற்று 'மொழி வரி' எனப்பெயரிடப்பெற்றுள்ளது. அதன் நூற்பாக்களாகக் கிடைத்துள்ளவை, இலக்கணத்தைத் தருவதுடன் மொழிக் கூறையும் குறிக்கின்றன. வரி: என்பது முதலில் கோடாக இடப்படும் வரிவடிவத்தையும், பின்னர் இசையையும் குறித்தது. தொடர்ந்தும் மொழிக்கூறு கொண்ட நூல்கள் மின்னலிட்டன.