பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிப்பெருமாள் என்பவர் திருக்குறளுக்கு உரை எழுதியவர். இவர் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது நூல்கள் பற்றிய பாடல் இது: " தெள்ளி மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார் ஒள்ளிய காமநூல் ஒர்ந்துரைத்து-வள்ளுவனார் பொய்யற்ற முப்பால் பொருளுரைத்தான் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து ” இப்பாடல் அவர் 'மொழியியல் என்னும் நூலை எழுதியதாகக் குறிக்கிறது. இந்நூல் இலக்கணத்துடன் மொழி இயல்பையும் கூறுவது ஆகலாம். அத் துடன் மொழியியல்' என்னும் பெயரீட்டை. இவ்வெண்பா அறிவிக்கின்றது. நாமறிந்துள்ளவரை மொழியியல்' என்னும் பெயரீடு முதன்முதலாகப் பதினோ ராம் நூற்றாண்டில் அமைந்துள்ளது. அதற்கு முன்னரும் இருந்திருக்கலாம். நாம் பெற்றுள்ளவற்றில் மொழியியல் கருத்துக்களைத் தருவது தொல் காப்பியம். இது சங்க இலக்கியங்களுக்கு இலக்கண நூல் என்பர். சங்க இலக்கியப் பாடல்கள் பலரால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு. பாடி னோர் பல காலத்தவர். தொல்காப்பிய காலத்திற்கு முந்திய பாடல்களும் இருக்கலாம். எனவே, சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள சொற்கள் ஏறத்தாழ 5000 அல்லது 6000 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று சொல்வதில் குறை யில்லை. அச்சொற்கள் மொழி வரலாற்றின் சின்னங்கள். ஒரு சோற்றுப் பதம்: தமிழ் எழுத்துக்களில் 'ரு'கரம் ஒரு மெல்லின எழுத்து. ‘ஞ்’ என்னும் மெய்யுடன் உயிர்மெய்களையும் சேர்த்து நெடுங்கணக்கில் 13 எழுத்துக்கள் உள்ளன. இவற்றுள் மொழிக்கு முதலில் வருபவை பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சங்க இலக்கியங்களில் ஞகரம் ஏழு உயிர்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் சொற்களாக உள்ளன. இங்கு 'ஆ'வுடன் கூடிய "ஞா'வை முதலாகக் கொண்ட சொற்கள் மட்டும் ஒரு சோற்றுப் பதத்திற்காக அவற்றின் வரலாற்றுடன் காட்டப்படுகின்றன. அவை தோற்ற வளர்ச்சியின் படிமுறையில் இவ்வாறு அமையும்: ஞாய், ஞாயில், ஞாயிறு: - - ஞால், (ஞால); - - - 52. பரிப்பெருமாள்: திருக்குறள் பரிப்பெருமாள் உரை. உரைப்பாயிரம் 63