பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வகை ஆய்வை மேற்கொண்டவர்களில் சென்னை அறிஞர் கே. சி. ஏ. ஞானகிரிநாடார் குறிக்கத்தக்கவர். இவர் மேலை மொழிகளை விரிவாக அறிந்தவர்; அவற்றின் வேர்ச்சொல்களைக் கண்டறியும் திறனாளர். தனக்கெனக் தனிவழி கொண்டு ஆய்ந்து முடிவுகள் தந்துள்ளார். இவ்வாய்வில் இவர் 100 சங்கச் சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றின் வேர் மூலத்துடன் ஐரோப்பிய மொழிகளை ஒப்பிட்டு ஆய்ந்ததில் அவர்தம் முடிவாக, 'ஐரோப்பிய மொழிகளில் எண்பது விழுக்காட்டுச் சொற்கள் தமிழின் சங்க இலக்கியச் சொற்களின் பங்களிப்பாகும்’ என்று அறிவித்துள்ளார். மேலும், இவர் 300 சங்கச் சொற்களைக் கிரேக்கச் சொற்கள் 300 உடன் ஒப்பிட்டு ஆய்ந்து அவை தமிழ்ச் சொற்களின் வேருடன் இணைந்து கிளைத்தவை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் நாட்டுச் சொற்கள் எவ்வாறு கிரேக்கத்திற்குப் போயின(?) என்பதையும் அவரே தந்துள்ளார்.

  • {

எட்டாம் நூற்றாண்டளவில் கிரேக்க நாட்டிலிருந்து பசுபிக் கடல் வழியாகத் தமிழகத்திற்கு வந்த பயணிகள், வணிகர், ஆசிரியர் பொறியாளர் முதலிய பல துறையினர் தமிழ் மக்களுடன் பழகி உரையாடி, கருத்தறிந்து, தமிழையும் உணர்ந்து சென்றனர் 'சி என்று காட்டியுள்ளார். இவ்வாறு தமிழ்ச் சொற்களும் சொற்களின் வேரடிகளும், உலகத்தின் மேலை, கீழை, வடக்கு வளாக மொழிகளில் பரவியுள்ளமை தமிழ் ஓர் உலக மொழி என்பதற்குச் சான்றாகும். இவ்வகையில் உலக அளவிலும், இந்திய அளவிலும் சொற்களை ஒப்பீடு செய்த தமிழ் அறிஞர்களில், சட்ட அறிஞர் கா. சு. பிள்ளை, யாழ். நல்லூர் ஞானப்பிரகாசர், மொழிஞாயிறு பாவாணர் சென்னை அறிஞர் ஞானகிரி நாடார், பொறியியலறிஞர் பா. வே. மாணிக்க நாயக்கர், மொழியறிஞர் ப. அருளி முதலியோர் குறிக்கத்தக்கோர் இன்னோர் தமிழ் ஒலி, வேர்ச்சொல் கொண்டு ஆய்ந்தோர். இவ்வாய்வுகளால் உலகத்தில் பரவியுள்ள தமிழ்ச் சொற்கள் பன்னூறாகி பல ஆயிரம் என்று கொள்ளத்தக்க அளவினது. இதனை விளக்கின் முது தனிநூலாக விரியும். - சுருக்கம் கருதி விரலெண் ணிக்கையில் காணலாம்: 53 K, C. A. Gnanakiri Nadar: Tamil Contribution to the European Languages A Proposal--Para I 4 * > Greek words of Tamil Origen Preface Para VIII 71