பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு வரலாறு 'சோழநாடு சோறுடைத்து' என்பது பலரும் அறிந்த தொடர் - உண்மை பொதிந்த தொடர். சோற்றுக்கு மூலமாகிய நெல், பயிரிடச்செய்யப்படும் இடம் வயல் என்று அறிவோம். 'செய்யப்படுவது' என்னும் சொல்லிலுள்ள செய்’ என்னும் ரவல் வினையே பெயராகி நின்று செய்' என்று வயலையும். குறிக்கும். நெல் விளையும் செய் நன்செய்; மற்றவை புன்செய். சோழ நாட்டின் தலைநகராக உறையூர் இருந்தது. அது 'ஊரெனப்படுவது உறையூர்' என்று பெயர் பெற்றது, துறைமுக -மாகிய பூம் புகாா பின்னர் தரை நகரமுமாயிற்று. பிற்காலச் சோழர் காலத்தில் தஞ்சாவூர் தலைநகரமாயிற்று. சோழன் இராசராசப் பெருமன்னன் காலத்தில் தஞ்சாவூர் சிறப்புப்பெற்றது. அவன் பெருவுடையார் கோவில் என்னும் கலைக்கோவிலைக் கண்டவன். இக்கோயிலில் ஒவியம், சிற்பம், கட்டடக்கலை சிறந்தோங்குகின்றது. இக்கோயில் கோட்டையைச் சூழப் பெற்றிருப்பது ஒரு சிறப்பிற்கு உரியது. தமிழ் மண்ணின் மைந்தர் உழவுத்தொழிலை மரபுத் தொழிலா -கக் கொண்டவர். அதனால் தத்தமக்கென வயல்களை-செய்களைப் பெற்றிருந்தனர். வாழ்ந்தோரெல்லாம் தம் செய்களை உடைமைக -ளாக உடையவர். தம் செய்யை உடையவர் வாழ்ந்த ஊர் தம் செய் ஊர் 'தஞ்சையூர் என்று ஆயிற்று. அஃதே தஞ்சாவூராயிற்று. பிற்காலச் சோழருக்குப் பின்னர் மராத்தியர் ஆட்சியைக் கைப்பற்றினர். மராத் திய மன்னருள் இரண்டாம் சரபோசி மன்னன் புகழ் பெற்றவன். அவன் பல பணிகளைச் செய்தான். அவற்றுள் வடமொழி அடுத்த நிலையில் மராத்தி, பின்னர் பிற மொழிகள் இடம் பெற்றன. நூல்களும் சுவடிகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பழந் தமிழ் நூல்களும் சுவடிகளும் நுண்ணோவியங்களும் தமிழ்மொழியில் அமைந்தன. அவன் இவற்றையெல்லாம் தொகுத்து சரசுவதி மகால் என்னும் கலைக்கூடத்தை நிறுவினான். அஃது இன்றும் நின்று நிலவுகிறது.