பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந் தியதாயி னும் பன்னுாறு ஆண்டுகள் என்று தொன்மை கி. மு. அளவில் மு. - - - மொழிக்களத்தை எட்டவில்லை. எட்டாதது. இவ்வாறு சீனம் உலக முதன எனவே, வடமொழியாம் சமற்கிருதந்தான் ஆரியத்தலைக்குடும்பத்தில் முதன்மை கொண்டதாகிறது. ஆரியத்தலைக்குடும்பத்தின் தலைத்தாயாகக் கொள்ளலாம். இத்தகுதிகளால் சமற்கிருதம் உலக முதன்மொழிக் களத்தில் ஏறி நிற்கிறது. அது ஏறி நிற்கும்போதே அக்களத்தில் ஒரு மொழி தோன்றி நிற்பதைக் கண்டது. அது எது? அதுதான் தமிழ் மொழி. எவ்வாறு? இதற்கு விடை காண தமிழ்-வடமொழி வேறுபாடு தமிழ்-வடமொழி வழக்கு தமிழ்-வடமொழிக் கலப்பு தமிழ்-வடமொழி இலக்கணக் கூறு தமிழ்-வடமொழி எழுத்துத் தோற்றம் இறுதியாக இரண்டன் வேர்ச்சொல் - எனப் படிப்படியாக ஒப்பீடு செய்ய நேர்கின்றது. வேறுபாடு: இரு மொழிகளுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. எனினும், காரணம்-இடுகுறி வேறுபாடே போதுமானதாகும். வடமொழி இடுகுறியையே கொண்டது. வடமொழி மறைமுதல் அனைத்தும் இடுகுறிகளே. தொல்காப்பியருக்குப் பிந்தியவரான யாஃச்கர்தான் வடசொற்களுக்குக் காரணம் கற்பித்தார். தமிழோ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன'; 'மொழிப் பொருள் காரணம் கொண்டவை. ஒரு மொழியின் தொன்மைக்கு மொழிப் பொருள் கரணியமே உறுதிச் சான்று. இன்றும் வட மொழிக்குக் கரணியம் காணுதல் கூடாத ஒன்று என்பதே வேதவாதிகள் கருத்து. சூடாமணியின் விண்மீன் பெயர்களுக்குப் பொருள் எழுத இப்பதிப் பில் முயன்று ஒரு சோதிட ஆய்வாளரை அணுகியபோது அவர் வடமொழியில் எச்சொல்லுக்கும் காரணம் காணக்கூடாது; அவை இடுகுறிகளே என்றார். 78.