பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப்பொருள் கரணியம் கொண்டது தமிழ் என்பதால் வடமொழிக் கும் முந்திய நிலையைத் தமிழ் கொண்டதாகின்றது. வழக்குகள்: தமிழ் பேச்சு வழக்கில் தோன்றி, எழுத்து வழக்கில் வளர்ந்து இன்றும் இரு வழக்கிலும் நின்று நிலவுவது. பிராகிருதத்திலிருந்து சமற்கிருதம் தோன்றியது; சமற்கிருதத்திலிருந்து பிராகிருதம் தோன்றியது என்னும் இரு கருத்துக்கள் அம்மொழியாளரிடையே உள்ளன. இதுபற்றி ஒரு முடிவு, வேதமொழியாக முதலில் குறிக்கப்பெற்ற இம்மொழி பலவகைச் சமற்கிருதமாகி ஒருவகை பிராகிருதம் என்றும், அத னின்று செம்மைப்படுத்தப்பெற்றது சமற்கிருதம் என்றும் ஆகின என்பதே. எனவே, முதலில் வேத மொழி. அதனின் இருபிரிவு பிராகிருதம், சமற்கிருதம். செம்மைப்படுத்தப்பெற்றது சமற்கிருதம் என்றாயிற்று. சமற்கிருதம் என்னும் செம்மைப்படுத்தப்பெற்ற மொழி முதலில் மறை மொழி (வேத மொழி) என எழுதாக் கிளவியாய்ப் பேச்சு வழக்கில் மட்டும் இருந்தது. பின்னர் எழுத்துக்கள் பெற்று எழுதும் மொழியாய் இலக்கிய வழக்கு பெற்றது. மீண்டும் பேச்சு வழக்கு குறைந்து எழுத்து வழக்கிலேயே நிற்கின்றது. ஆயினும் அவ்விலக்கிய இலக்கணம் கற்றோர் அவைபற்றி ஆயும்போது அதனைப் பேசவும் செய்கின்றனர். இவ்வாறு பேச்சு, எழுத்து இரண்டினும் மாறி இரண்டும் இருந்த காலம் மிகக் குறைந்ததாக இருந்தது. இவ்வகையில் தமிழ் பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு இரண்டினும் காலங்காலமாய் மாற்றமின்றி நின்று நிலவுவதும் அதன் முதன்மொழித் தகவை வலியுறுத்துகிறது. கலப்புகள்: ஒரு நாட்டில் வாழும் மக்களுடன் வந்தேறிகள் கலந்து வாழ்ந்தால் இருந்த மொழியில் வந்த மொழி கலப்பதும். வந்த மொழியில் இருந்த மொழி கலப்பதும் இயல்பு. தமிழ் நாட்டில் சமற்கிருதமிாம் வடமொழி இந்திய மண்ணில் புகுந்தது முதல் இம்மண்ணில் வாழ்ந்த தமிழர் மொழியிடையே புகுந்தது. அதுபோன்றே வடமொழியிலும் தமிழ் புகுந்தது. இக்கலப்பால் தமிழிலிருந்து மலைஞாலம், கன்னடம், தெலுங்கு முதலிய கிளை மொழிகள் உருவாயின. இதுபோன்றே 79