பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திராவிடத் தாக்கத்தினாலேயே வடநாட்டில் பல உள்நாட்டு மொழிகள் வடமொழியிலிருந்து பிறந்தன' என்றார் அறிஞர் ஈட்சிசன் (Hadson) எ ன் பார். இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் வரலாற்றறிஞர் பி. தி. சீனிவாச ஐயங்கார், "மராத்தி, குசராத்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளெல் லாம் சொல்லாலும் சொற்றொடராலும் தமிழ் அடிப்படை கொண்டவை:ே என்று காட்டினார். அறிஞர் கால்டுவெல்லார், "ஆங்கிலத்தில் எவ்வளவு தியூத்தானியச் சொற்கள் உள்ளனவோ அவ்வளவு திராவிடச் சொற்கள் சமற்கிருதத்தில் உள்ளன" என்று பதிந்துள் ளார். ஆனால் வடமொழியாளரிடம் ஒரு நோய் தொடர்ந்து இருந்து வருகின் றது. அது தமிழில் வடசொற்களே மிக மிக உள்ளன. வடமொழியில் அவ்வா றில்லை என்பது. வடமொழியாளர் மட்டுமா? தமிழ் மக்களில் சில புலவர் களும் இந்நோய் கண்டவர்கள் எனச்சொல்ல வேண்டும். எந்தச் சொல்லைக் கண்டாலும் அதன் ஒலியைத் தவறாகக்கொண்டு அது வடசொல் என்று எளிதில் சொல்வது வடமொழித் தமிழாசிரியர் வழக்கம். இந்தத் திடீர் முடிவைக் கால்டுவெல்லார், - 'வடமொழிக்கும் திராவிட மொழிக்கும் பொதுவான ஒரு சொல்லை. எங்கேனும் கண்டால் அதனை உடனே வடசொல் என்று கூறிவிடுவர்" என்று அடையாளங் காட்டினார். ஆனால், வரலாறு அறிந்தோர் தமிழ் மக்கள் இந்தியாவில் எங்கும் பரந்து வாழ்ந்ததை அறிந்து, அங்கு வடமொழியாளர் வந்தபிறகு நேர்ந்த வற்றை ஆய்ந்து பார்த்து, அங்குள்ள பழம் மொழிகள் தமிழினின்றும் வேறு பட்டதைக் கண்டுள்ளனர். இதனை ஆய்ந்த அறிஞர் மாக்சு முல்லர், - ' மைய இந்தியாவிலும், இமயமலைச் சாரலிலும், மலைத்தீவுகளி லும் (Moladives) உள்ள மொழிகள் மண்டா என்னும் பெரும் பிரிவைச் சார்ந்தவை ” - . . . 63 Dr. Hadson; Asian Society—Monthly—Bengal. 64 13. 6. 9-dame guilarif. Stone age in India 65 smá60svá, Comparative Grammar of the Dravidian Languages P 566. 66 gox 2, يويور