பக்கம்:சூரப்புலி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சடையன் செய்த கெட்ட காரியத்தை மாளிகையில் உள்ளவர் களுக்கு அறிவிக்கச் சூரப்புலி வாயெடுத்தது. அதன் கருத்தைத் தெரிந்துகொண்டு சடையன், கோழியைக் கீழே போட்டுவிட்டு: கோபத்தோடு உர்ரென்று உறுமுவதுபோல் பாவனே செப்தது. சூரப்புலி பயந்து வாலே இடுக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டது. சூரப்புலியின் இடத்திலேயே சடையன் கோழியைப் போட்டுத் தின்றது. பிறகு, கோழிப் பொங்குகளையும், எலும்புகளை யும் அங்கேயே போட்டுவிட்டுத் தன் இடத்திலே போய்ச் சுகமாகத் தூங்கலாயிற்று. மறுநாள் காலேயில், மாளிகையில் ஒரே பரபரப்பு. வேலைக்காரர்கள் கூச்சல் போட்டார்கள். கோழியைச் சூரப்புலிதான் அடித்துத் தின்றுவிட்டதாக அவர்கள் தினத்தார்கள். அதனல், அதைக் கட்டி வைத்து, சாட்டையால் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். குரப்புலி வாள்வாளென்று கத்தி அழுதது. சடையன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு, பக்கத்திலே மகிழ்ச்சியோடு படுத் திருந்தது. சூரப்புலிக்கு இரக்கம் காட்டுபவர்கள் பாருமே இல்லை . இந்தச் சம்பவத்தால் சூரப்புலி மனமுடைந்துவிட்டது. அந்த மாளிகையில் இனிமேல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தது. ஒன்பது மாதமே ஆன குட்டியாகிய தன்னல் ஒரு பெரிய கோழியைப் பிடித்து முழுவதையும் தின்ன முடியாது என்பதைக்கூட யாரும் அறிந்துகொள்ளவில்லையே என்று நினத்து, அது மிகவும் வருத்த மடைந்தது. உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்யும் நாயாகத் தன்னே அவர்கள் நினைத்ததை எண்ணியும் அது வருந்தி அழுதது. அன்று இரவு வெளிவாயில் சாத்திப் பூட்டுவதற்கு முன்னல், யாரும் அறியாதபடி அது வெளியே கிளம்பிவிட்டது, மறுபடியும் தெரு வழியாக அலேயவேண்டி நேர்ந்ததை நினைத்து அது மிகவும் வருத்த மடைந்தது. சாட்டை அடியால் உடம்பிலே பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. காயத்தால் ஏற்படும் வலியைப் பொறுத்துக் கொண்டே, அது மேட்டுப்பாளையத்துத் தெருக்களின் வழியாகச் சுற்றிக்கொண்டிருந்தது. பல நாட்கள் பட்டினியாகக் கிடந்தும், அது வீட்டுவாயிலிலே போடும் எச்சிலிலேயைத் தேடிச் செல்லவில்லை. அது பட்டினியாகவே அலேந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/10&oldid=840543" இலிருந்து மீள்விக்கப்பட்டது