பக்கம்:சூரப்புலி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதித்தது. அதன் பாதங்களும் மரத்துப் போயின. வா, உனக்குப் பாதரட்சை போடுகிறேன்' என்று துறவி கூப்பிட்டார். சென்னே யிலே செருப்புக்கடையில் சூரப்புலிக்காகத் தனியாகத் தயார் செய்த பாதரட்சைகளைத் துறவி தமது மூட்டையில் பத்திரமாக வைத் திருந்தார். அவற்றை எடுத்துச் சூரப்புலியின் கால்களில் மாட்டிக் கட்டினர். பனிப்பரப்பின் மேல் அவற்றை அணிந்துகொண்டு நடப்பது சூரப்புலிக்குச் சுலபமாக இருந்தது. ஆல்ை, அன்று அதற்கு மேலே யாத்திரையைத் தொடர முடியவில்லே. உறைபனி பெய்யத் தொடங்கிவிட்டால் லிப்புத் தடாகக் கணவாயில் செல்ல முடியாது. சென்ருல் கெட்டியாகாத உறைபனியிலேயே அழுந்தி இறக்க நேரிடும். அதனல் துறவி பக்கத்திலிருந்த குன்றுப்பகுதிக்குச் சென்ருர். உறைபனியி லிருந்து தப்ப ஒரு நல்ல இடம் தேடினர். சூரப்புலி அவருடைய கருத்தைப் புரிந்துகொண்டு முன்னல் ஓடிப் பார்த்தது. ஒரிடத்திலே சிறிய குகையொன்று தென்பட்டது. அதற்குள்ளே துறவி நுழைந்து தங்கினர், உறைபனி வெகுநேரம் பெய்யவில்லை. இருந்தாலும் நிலத்தில் படிந்த உறைபனி உருகியோடும் வரையிலும் அதன்மீது நடந்து கணவாயைக் கடக்க முடியாது, அதல்ை துறவி குகையிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/105&oldid=1276974" இலிருந்து மீள்விக்கப்பட்டது