பக்கம்:சூரப்புலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I U / குரப்புலி அழுதுவிட்டது. அதன் கண்களில் நீர் வடிந்தது. அடே, எதற்கு இப்படி வருத்தப்படுகிளுப் இறைவனிடம் போகும் போது ஒரு சுமையும் இருக்கக்கூடாது' என்று அதைத் தட்டிக் கொடுத்தார். அது ஆறுதலடையவில்லே. துறவிக்கு உண்ண உணவில்லை : கடுங்குளிரில் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள உ ைட யி ல் லே. பனிப்படலத்தின்மீது காலெடுத்து வைக்கும்போது காப்ே பாதுகாக்கப் பாதரட்சை இல்லே. இவற்றையெல்லாம் எண்ணி அது வருந்தியது. துறவிமட்டும் அனுமதித்திருந்தால் அந்த மூன்று திருடர்களையும் பமலோகத்திற் அனுப்பியிருக்கும். அப்படி ஆத்திரம் அதற்கு. ஆனால் அதை நினைத்து என்ன செய்வது ? சூரப்புலி குகையைவிட்டு வெளியே வந்தது. உலர்ந்த சாணி மொத்தைகளை வாயால் கவ்வி எடுத்து வந்து நெருப்பில் போட்டது. துறவி தம்மை மறந்து தியானத்தில் அமர்ந்திருந்தார். உறைபனி விழுவதற்கு முன்னே சாணி மொத்தைகளே நிறையச் சேர்த்து வைத்துவிட்டது சூரப்புலி, அவற்றைக்கொண்டு உண்டாக்கிய நெருப்பின் உதவியால் துறவி எவ்வித ஆடையுமின்றி இரவைக் கழித்தார். பொழுது விடிந்தது. துறவி அப்பொழுதும் ஆழ்ந்த தியானத் திலேயே இருந்தார். ஆடையில்லேயே, உணவில்லேயே என்ற கவல்கள் அவருடைய உள்ளத்தில் எழுந்ததாகவே தெரியவில்ல். சூரப்புலி மீண்டும் சாணி வரட்டிகளைத் தேடி எடுத்து வந்தது. அவ்வாறு செய்து நெருப்பை அணையாமல் வைத்துக்கொண்டு குகைக்குள்ளே வெப்பமாக இருக்கும்படி கவனித்துக்கொண்டது. ஆனல் அது மட்டும் போதுமா ? துறவிக்கு உணவு வேண்டாமா ? அந்தக் கவலே அவரை வாட்டாவிட்டாலும் சூரப்புலியை வாட்டத் தொடங்கிற்று. கம்பாக்களே நினைத்து அது உள்ளம் குமுறியது. சென்னைப் பட்டினத்தில் துறவியின் பணப்பையை ஜேப்படி செய்தவனே விட இந்தக் கம்பாக்கள் இழிந்தவர்கள் என்று கருதியது. குளிராலும் பசியாலும் துறவியை உயிரிழக்குமாறு விட்டுச்சென்ற மனிதர்களே விடக் கேவலமானவர்கள் யாருமிருக்கமாட்டார்களென்று அது தீர்மானித்தது. துறவி தன்னையும் தன் உடைமைகளையும் பாது காத்துக்கொள்ள வகையில்லாமல் இருக்கவில்லை. சூரப்புலியை ஏவி பிருந்தால் அந்த மூன்று பேரையும் எதிர்த்துப் போராடி வெற்றி கண்டிருக்கும். ஆனல் அவ்வாறு செய்யாமல் தாமாகவே விரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/110&oldid=840555" இலிருந்து மீள்விக்கப்பட்டது