பக்கம்:சூரப்புலி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்த நாள் மீண்டும் பாத்திரை தொடங்கிற்று. இனிமேல் கபிலாய கிரியை அணுகும் காலம் குறுகிவிட்டது. துறவி ஆவேசம் கொண்டவர் போல ஒரு மலேயின் உச்சிக்கு ஏறினர். சூரப்புலி அவருக்குப் பக்கத்திலேயே சென்றது. உச்சியிலிருந்து கயிலா பத்தின் காட்சி தெரிந்தது. கடல் மட்டத்திலிருந்து 23000 அடி உயரத்திலிருக்கும் கபிலாய கிரியின் சிகரமாகிய விசுவலிங்கம் ஜோதி மயமாகக் காட்சியளித்தது. எப்பொழுதும் பனி மயமாக இருக்கும் அந்தப் பெரிய லிங்கம் சூரியனுடைய கிரணங்கள் பட்டுப் பொன்னல் செப்த லிங்கம் போலத் தோன்றிற்று. பொன்னர் மேனியன் என்று இறைவனப் பாடிப் புகழ்ந்திருக்கிருர்கள் அடியவர்கள். அவர்கள் பாடிய அந்தப் பொன்மேனி வடிவத்தை அங்கு எதிரிலேயே துறவி கண்டார், சூரப்புலியும் கண்ணிமைக்காது ஆச்சரியத்தோடு பார்த்து நின்றது. கையிலாசபதியே போற்றி” என்று கூறிக்கொண்டே துறவி தரையில் விழுந்து வணங்கினர். பிறகு நெடுநேரம் அத் த லிங்கத்தைப் பார்த்தவாறே தியானத்தில் அமர்ந்தார். அப்பொழுதுதான் சூரப்புலிக்கு அந்த நீண்ட பாத்திரையின் நோக்கம் தெளிவாயிற்று. அதன் உள்ளத்திலே என்றுமில்லாத ஒரு புது ஒளி எற்பட்டது. துறவியின் அருகிலே அது பிரார்த்த:ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/115&oldid=1276969" இலிருந்து மீள்விக்கப்பட்டது