பக்கம்:சூரப்புலி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮧ H y செய்வதுபோலப் படுத்தது. துறவியின் கருணையாலே தனக்கு ஒரு பெரிய பாக்கியம் கிடைத்ததாக அது உணர்ந்திருக்க வேண்டும். மால் நேரம் ஆகிவிட்டலு. ஆல்ை, எங்காவது தங்கி இரவைக் கழிக்கத் துறவி விரும்பவில்லே, அவர் இரவு முழுவதும் கபிலாயத்தை நோக்கி.நடந்துகொண்டேயிருந்தார். மறுநாள் மால் நேரத்தில் கயிலாய கிரியின் அருகிலே வந்து சேர்ந்தார் துறவி. ஓம் ஒம் என்று அவர் சதா வாப் விட்டுக் கூறலானர். அப்பொழுது அங்கே வீசிய காற்றிலும் ஓம் ஓம் என்ற ஒலி கேட்டது. எவ்விதமான அரவமுமில்லாமல் ஒரே அமைதியோடு விளங்கும் அந்தப் பிரதேசத்திலே காற்று வீசும்போது ஓம் என்ற ஒலி எங்கிருந்தோ கேட்டது. கபிலாய கிரியைச் சுற்றிக் கோட்டைச் சுவர்போல உயர்ந்த மலேகள் இருந்தன. முன்லிைருந்த மல்பொன்றிலே ஒரு குகை போன்ற பகுதியிலே துறவி தங்கினர். காற்றுக்கு அடக்கமாக மேற்குப் பகுதியில் இருந்தது அந்தக் குகை. மறுதாள் காலேயிலிருந்து கயிலாய கிரியை வலம் வருகின்ற பயணம் தொடங்கிற்று. துறவி தம்மை மறந்து இறைவனுடைய நினவிலேயே நடந்தார். கயிலாய கிரியைச் சுற்றி வருவதற்கு 32 மைல் நடக்க வேண்டும். சிறுசிறு மலைகளில் எறியும் இறங்கியும் வழி செல்கின்றது. பனி நிறைந்த இடங்களும், வெறும் பாறையான இடங்களும் உண்டு. கயிலாய கிரியில் வெளிப்பகுதி கோட்டைச் சுவர்போல அமைந்துள்ளது. சில இடங்களிலே விசுவலிங்கம் காட்சி தருகிறது; வேறு இடங்களில் அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. துறவி வலம் வரும்போது வேறு யாரும் அங்கு இல்லை. சூரப் புலிதான் அவருடன் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தது. துறவி எப்பொழுதாவது தமது மெளனத்தைக் கலேப்பார். அப்படிக் கல்க்கும்போதெல்லாம் ஓம் ஓம் என்று கூவுவதைத் தவிர வேறு ஒன்றும் பேச மாட்டார், விசுவலிங்க தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் அவர் மெய்மறந்து நிற்பார். ஒவ்வொரு தரிசனத்தின் போதும் அந்த லிங்கம் ஒரு புது விதமான அழகையும் வண்ணத் தையும் கொண்டிருந்தது. ஒரு பகுதி தங்கப் பிழம்புபோலவும், மற்றப் பகுதி பசுமை கலந்தும் ஒரு சமயத்திலே தோன்றும்; சூரியனுடைய ஒளி புகுவதால் ஒரு சமயத்தில் வானவில்லின் வர்ண ஜாலங்கள் வெளிப்படும். ஒரு சமயத்தில் வெண்மேகம் கிரீடம்போல அமைந் திருக்கும். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துத் துறவி பேரின்ப கு-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/116&oldid=840562" இலிருந்து மீள்விக்கப்பட்டது