பக்கம்:சூரப்புலி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مبية هي قر கபிலாயகிரி; தெற்கிலே மாந்தாத சிகரங்கள். உறைபனி மூடிய இவை இரண்டிற்கும் இடையிலே மானசம் பச்சை நிறத்தோடு காட்சி பளிக்கின்றது. சுமார் 40 மைல் நடந்து துறவி மானசத்தை படைந்தார். அந்த அழகிய தடாகத்திலே குளித்தார். சூரப்புலியும் குளித்து மகிழ்ந்தது. தடாகத்திலிருந்து கரையேறி வடதிசையைப் பார்த்த போது கபிலாய லிங்கம் ஜோதி வடிவமாகக் காட்சி தந்தது. துறவி மானசக்கரையிலே அமர்ந்து நெடுநேரம் தியானத்தி லிருந்தார். மாலே வேக்ாயில் கடுமையான புயற்காற்று வீசத் தொடங்கிற்று. கடல் அலேகள்போல மானசத்தில் அகைள் எழுந்து ஆரவாரம் செய்தன. ஆலங்கட்டி மழையும் சேர்ந்துகொண்டது. தங்கு வதற்கு எவ்விதமான ஏற்பாட்டையும் கவனியாமல் துறவி அமர்ந்திருந்தார். சூரப்புலி அவருக்கு உதவி செய்ய வகை பறியாது வருத்தப்பட்டுக்கொண்டு நிக் கொள்ளாமல் அகீலந்தது. அந்தச் சமயத்திலே பெளத்த சந்நியாசிகள் இருவர் அங்கு வந்தனர். துறவியைத் தமது மடத்திற்கு வந்து தங்குமாறு அன்போடு அழைத்தார்கள். இறைவனுடைய கருணயை எண்ணி வியந்தவாறே துறவி எழுந்து அவர்களுடன் நடந்தார். குரப்புலி மகிழ்ச்சியோடு பின் தொடர்ந்தது. மானசசரோவரத்தைச் சுற்றிலும் எட்டுப் பெளத்த மடங்கள் இருக்கின்றன : அவற்றில் ஒன்றிலுள்ள சந்நியாசிகளில் இருவரே அங்கு வந்தவர்கள். அந்த மடத்திலே துறவி இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். பிறகு கயிலாய கிரியை நோக்கிப் புறப்பட்டார். அவரிடம் உணவு ஒன்றும் இல்லை என்றறிந்த பெளத்த சந்நியாசிகள் அவருக்கு நிறைய உணவுப் பொருள்கள் கொடுத் தனுப்ப விரும்பினர்கள். ஆனால், துறவி அவற்றை எடுத்துக் கொள்ளச் சம்மதிக்கவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதின் மேல் மூன்று நாட்களுக்கு வேண்டிய உணவை எடுத்துச் செல்ல இணங்கினர். மானசசரோவரத்தில் அதிகாலையில் கடைசி முறையாக நீராடி விட்டுத் துறவி மீண்டும் கபிலாயகிரியை நோக்கி வடக்குத் திசையிலே புறப்பட்டார். எதிரில் விசுவலிங்கம் காட்சியளித்துக் கொண்டேயிருந்தது. அதை நோக்கி நடக்கத் நடக்க துறவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/118&oldid=840564" இலிருந்து மீள்விக்கப்பட்டது