பக்கம்:சூரப்புலி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

கொடுத்து விட்டுச் சூரப்புலி வந்திருக்கிறது என்பதையும் அவர் ஊகித்து அறிந்து கொண்டார். எனக்காக உன்னுடைய உணவைத் தானம் கொடுத்துவிட்டு வந்தாயா? நல்ல காரியம் செய்தாய் என்று சொல்லிக்கொண்டே துறவி சூரப்புலியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தார். சூரப் புலியின் உடம்பிலே ஆனந்த வெள்ளம் பாய்வது போல இருந்தது, அது தன்னுடைய இன்பத்தைச் சொல்ல முடியாமல் ஏதேதோ குழறிக்குழறி முணுமுணுத்தது. விசுவலிங்கத்தின் பக்கத்திலிருந்து ஓம் என்ற ஒலி நீண்டு எழுந்தது. ஓம் ஓம் என்று துறவி சூரப் புலியின் நெற்றியில் கைபைடவைத்துக்கொண்டே எதிரொலித்தார். சூரப்புலியும் வாய் திறந்து ஒலிக்கத் தொடங்கிற்று. ஊளையிடு வதுபோல அது விசுவலிங்கத்தை நோக்கி நின்று குரலெடுத்தது. ஆனால், ஊ என்று அது ஊளையிடவில்லை. ஓம் என்று அது நீளமாக ஆனந்தத்தோடு ஒலித்தது. அந்த ஒலியைக் கேட்டுத் துறவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மறுபடியும் சூரப்புலியின் நெற்றியின் மீது வலக்கரத்தை வைத்தார். சூரப்புலி தன்னை மறந்து இன்பத் திலே ஆழ்ந்து அப்படியே படுத்தது. இரவு முழுவதும் அது அப்படியே படுத்திருந்தது. துறவியும் தியானத்தில் ஆழ்ந் திருந்தார். அடுத்த நாள் காலை சூரிய ஒளி பொன் மஞ்சள் நிறத் தோடு விசுவலிங்கத்தின்மீது படிந்தது. “நீ அன்போடு கொண்டு வந்த உணவு; வா, சாப்பிடுவோம்” என்று கூறிக்கொண்டே துறவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/124&oldid=1276967" இலிருந்து மீள்விக்கப்பட்டது