பக்கம்:சூரப்புலி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தூக்குக் கூடையைக் கையில் எடுத்தார். அதுதான் துறவிக்கும் குரப்புலிக்கும் கடைசி முறையாக உணவு. தூக்குக் கூடையையும் மீதியிருந்த உணவையும் அங்கேயே எறிந்துவிட்டுத் துறவி விசுவ லிங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். சூரப்புலி அவருக்குப் பக்கத் திலே சென்றது. வா. நம் வீட்டிற்குப் போவோம்' என்று சொல்லிக்கொண்டே துறவி நடந்தார். "அம்மையே, அப்பா, நாங்கள் வருகிருேம்: எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஜோதிலிங்கத்தைப் பார்த்துத் தாய் தந்தையிடம் பேசுவதைப்போலக் கூறிக்கொண்டே துறவி நடந்தார். வெள்ளிமலை போலவும் லிங்க வடிவாகவும் இருக்கின்ற கயிலாய நாதனச் சுற்றி அருகிலேயே பிரதட்சிணம் செய்வதற்கு ஒன்பது மைல் நடக்கவேண்டும். ஆனல், இந்த உள் பிரதட்சிணத்தைச் சாதாரணமாக யாரும் செய்யமாட்டார்கள். பனிப்பாறைகள் சூரிய ஒளியில் வெடித்து விழுந்துகொண்டேயிருக்கும். உறைபனி அங்கே அடிக்கடி விழுந்துகொண்டேயிருக்கும். அம்மாதிரியான இந்த உட்பகுதியிலே துறவி நடந்தார். சூரப்புலி அவருடன் சென்றது. அவ்வாறு செல்லுகின்றவர்கள் உறைபனியிலே அழுந்திவிடுவார்கள் என்று பொதுவாக எல்லோரும் கருதுவார்கள். ஆல்ை, துறவி தாம் உறைபனியில் அழுந்துவதாக உணரவில்லை; சூரப்புலியும் அவ்வாறு உணரவில்லை. எதோ ஓர் இன்ப லோகத்திலே செல்வதுபோலவும் அது உணர்ந்தது. அமுதகலசத்திலிருந்து அமுதத்தை அள்ளி அள்ளித் தன்னுடைய வாயிலே ஊட்டிக்கொண்டே துறவி பக்கத்தில் செல் லுவதுபோலவும் அது உணர்ந்தது. உலகத் துன்பங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன. உடம்பு என்பதும் திடீரென்று மறந்துவிட்டது போலத் தோன்றிற்று. எல்லாம் ஒரே இன்பமயமாயிற்று. ஜோதி லிங்கத்திலே சூரிய ஒளி பட்டு ஓர் அற்புதமான வானவில் தோன்றி எங்கும் நிறைந்தது. அந்த வர்ண ஜாலங் களுக்குள்ளே துறவி நடந்தார். சூரப்புலியும் அடியெடுத்து வைத்தது. உறைபனி திடீரென்று பெரிய அளவிலே பெப்பத் தொடங்கிற்று. தேவலோகத்திலிருந்து பூ மாரி பொழிவது போலச் சூரப்புலிக்குத் தோன்றிற்று. பனி மயமான ஜோதிலிங்கம் தன்ளுேடு சேர்த்துத் துறவியையும் சூரப்புலியையும் அன்போடு அங்ணத்துக்கொண்டது. துன்பமில்லே, சோர்வில்லே, எல்லாம் இன்பம் என்ற நிக்லயில் சூரப் புலி துறவியோடு சேர்ந்து அவருடைய கருணையால் ஆனந்தமான வாழ்க்கையை அடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/125&oldid=840572" இலிருந்து மீள்விக்கப்பட்டது