பக்கம்:சூரப்புலி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 கிடைக்கவில்லே, அதல்ை பசியின் கொடுமை அதிகமாக இருந்தது. அதைவிட மூக்கில் பட்ட அடியில்ை வலி அதிகமாக இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் ஒ ழு கி க் .ெ க ர ன் டே இருந்தது. இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு சூரப்புலி, அடுத்த நாளே எதிர்பார்த்துப் படுத்திருந்தது. நன்ருகத் தூங்கிவிட்டுக் காலேயில் எழுந்த காவல்காரர்கள், கோடிக் கிடங்கின் கதவு திறந்து கிடப்பதையும், உருளைக்கிழங்கு மூட்டைகளை எடுத்துப் பிறகு அவசரம் அவசரமாக எறிந்துவிட்டுப் போயிருப்பதையும் கண்டார்கள். திருடர்கள் வந்து பூட்டைத் திறந்திருப்பதையும், அவர்கள் முயற்சி பலிக்காமல் போனதையும் அறிந்துகொண்டார்கள். அந்தச் சமயத்திலே, சூரப்புலி அவர்கள் முன்னல் வந்து வாலேக் குழைத்துக்கொண்டு நின்றது; காவல் தடியை வீசியதால் அதன் மூக்கில் காயமேற்பட்டிருந்ததையும், அதிலிருந்து ஒழுகிய ரத்தம் கோடிக் கிடங்கு வரையிலும், அதற்குள்ளும் சிந்தி உறைந்து கிடப்பதையும் அவர்கள் பார்த்தார்கள். சூரப்புலி செய்த உதவி அவர்களுக்கு நன்ருகத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அதற்கு நன்றி செலுத்த அவர்கள் நினைக்கவில்க்ல. 'இந்த நாயைத் துரத்திவிட்டா. இது இங்கே இருந்தால் முதலாளி வருகின்றபோது உண்மை வெளியாகிவிடும்' என்ருன் ஒருவன். "ஆமாம், நாம்தான் திருடர்களைக் கண்டுபிடித்து விரட்டி விட்டதாகச் சொல்லிக்கொள்ளவேண்டும். கைத்தடியால் திருடன் ஒருவனுக்கு முதுகிலே நல்ல அடி என்றும் சொல்லுவோம்’ என்ருன் மற்றவன். "நல்ல அடிதான் அவனுக்கு. அதிலென்ன சந்தேகம் ? இதோ அவன் பட்ட அடியிலிருந்து ரத்தங்கூட ஒழுகிக் கிடக்கிறதே ' இது முதல் காவல்காரனுடைய புதிய கற்பன. 'பட்ட அடியிலே ஆள் பிழைப்பதுகூடக் கஷ்டம். அப்படி நான் ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டேன். இரண்டாவது காவல்காரன் இன்னுங் கொஞ்சம் கற்பண்பைப் பெருக்கினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/14&oldid=840574" இலிருந்து மீள்விக்கப்பட்டது