பக்கம்:சூரப்புலி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முதலில் இந்த நாயை ஒரு போடு போடு, பார்க்கலாம்’ என்ருன் மற்றவன். சொல்லி வாய்மூடும் முன்பே, காவல் தடி மறுபடியும் சூரப்புலியை நோக்கிப் பறந்தது. சூரப்புலி இதை எதிர்பார்க்கவேயில்லை. அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இடத்தில் அடிதான் கிடைத்தது. இந்தத் தடவை அதற்கு முதுகிலே நல்ல காயம் எற்பட்டுவிட்டது. கை......கை என்று கத்துவதிலே சூரப்புலிக்கு இன காணமுடியாது. பாவம், கத்திக்கொண்டே வால் இடுக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தது. எங்கு போவதென்ற எண்ணமே இல்லாமல் கால்போன திக்கிலே பாய்ந்து ஓடியது. பசியையும் மீறி ஏற்பட்ட பயத்தினல் அதன் கால்கள் எப்படியோ சக்தி பெற்றுவிட்டன. மனிதனிடத்திலே அதற்கு வெறுப்புத் தோன்றிவிட்டது. எவன் ஆதரவளிப்பானென்று எண்ணியதோ அவன் இரக்கமற்றவகை இருந்தான். பாக்கு வியாபாரியின் செல்வச் சிறுவன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக அதைத் துன்பப்படுத்தின்ை. முதலாளியிடத்திலே தாங்கள் நன்மதிப்புப் பெறுவதற்காகக் காவல்காரர்கள் தடியால் அடித்தார்கள். எல்லா மனிதரும் இப்படித்தானே ? அப்படியால்ை , எஜமானனாக இப்படிப்பட்ட மனிதனே எற்றுக்கொள்வதிலே பயனில்லே என்ற எண்ணம் அதன் இள உள்ளத்திலே முக்ளக்கத் தொடங்கியது. மனிதன் வாழாத அடர்ந்த காட்டிலே போய் வாழ வேண்டும் என்ற தீர்மானம் மெல்ல உதயமாயிற்று. ஒடிக்கொண்டிருக்கும்போதே இந்த எண்ணமும் தீர்மானமும் தோன்றிவிட்டன. பவானி ஆற்றுப் பாலத்தைக் கடந்துவிட்டால் பிறகு நீலகிரி மலேச்சாரலிலுள்ள காடுகளே உண்டு. மேலே போகப் போக மனித வாசனயே அநேகமாக இல்லாது போய்விடும். அப்படிப்பட்ட இடத்திலே போப் வாழலாம் என்று அது போய்க்கொண்டிருந்தது. பசியும், வலியும் அதன் தீர்மானத்தை உறுதிப்படுத்தின. இனி இந்த மனிதர்களுடைய உறவே வேண்டாம். மனிதன் சுயநலம் மிகுந்தவன். தன்னுடைய சுகத்தையும் இன்பத்தையுமே நாடுபவன். மற்றப் பிராணிகளே அவன் தனது சுகத்திற்காக எவ்வளவு கொடுமையாக நடத்தவும் தயங்க மாட்டான். இவ்வாறு சூரப்புலியின் உள்ளத்திலே எண்ணங்கள் எழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/15&oldid=840575" இலிருந்து மீள்விக்கப்பட்டது