பக்கம்:சூரப்புலி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சூரப்புலி மறைந்து தங்கியிருந்த புதருக்கு முன்ல்ை கொஞ்சம் வெட்டவெளி இருந்தது. அதன் மத்தியிலே குட்டைபோல நீர் தேங்கியிருந்தது. மங்கிய வெளிச்சத்திலே அது இப்பொழுது கண்ணுக்குப் புலப்பட்டது. பக்கத்திலேயே தண்ணீர் இருக்க இரவெல்லாம் தாங்க முடியாத தாகத்தோடு கிடந்ததை நினைத்து அது ஆச்சரியப்பட்டுக் கொண்டு அந்தக்குட்டையை நோக்கிச்செல்ல ஒரு கால் முன்ல்ை வைத்தது. அந்தச் சமயத்திலேதான் அந்தக் கொடிய சம்பவம் மின்னல் வேகத்திலே நடந்தது. காட்டெருமை யொன்று தனது இளங்கன்ருேடு அந்தக் குட்டையை நோக்கி வந்தது. அதற்கும் மிகுந்த தாகமாகத்தான் இருக்க வேண்டும். அது குட்டையிலுள்ள தண்ணீரில் வாயை வைத்து இரண்டு வாய் குடித்திருக்கலாம், அதனருகில் துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண் டிருந்த கன்றின் மீது எங்கிருந்தோ திடீரென்று வந்து ஒரு சிறுத்தைப் புலி பாய்ந்தது. தண்ணிரைத் தேடி அந்தக் குட்டைக்கு வரும் விலங்குகளே எதிர்பார்த்து அது பக்கத்திலேயே மறைந்திருக்க வேண்டும். சிறுத்தைப்புலி அங்கு வந்தபோது கொஞ்சங்கூட ஒசை உண்டாகவில்லேயே என்று நினத்து ஆச்சரியப்படுவதற்கெல்லாம் சூரப்புலிக்கு நேரம் கிடைக்கவில்லை. ஏனென்ருல் அதற்குள்ளே ஒரு கடுமையான போராட்டம் தொடங்கி விட்டது. சிறுத்தைப்புலி சரியாக எருமைக்கன்றின்மீது பாப்ந்துவிட வில்லே. துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த கன்று எப்படியோ ஒரு சாண் வித்தியாசத்தில், அதன் கொடிய கோரைப் பற்களுக்கும் அதன் முன்னங்கால்களிலிருந்து தயாராக நீட்டிக்கொண்டிருந்த கூர்மையான நகங்களுக்கும் தப்பிவிட்டது. புலி மீண்டும் தனது முயற்சியைத் தொடங்குவதற்கு முன்னல் தாய் எருமை முந்திக் கொண்டது. தண்ணீரை விட்டு ஒரே பாய்ச்சலில் தனது கன்றின் அருகே சீறிக்கொண்டு வந்தது . தலையைச் சற்றுக் கீழே குனிந்து பயங்கரமாகத் தோன்றும் அதன் இரண்டு கொம்புகளையும் நேராக வைத்துக்கொண்டு அது சிறுத்தையின்மீது பாய்ந்தது. அப்பா அப்பொழுது அதன் தோற்றம் எவ்வளவு பயங்கரம் அதன் கண் களிலே அப்பொழுது தோன்றிய கோபாவேசத்தை யாராலும் குலேநடுக்கமெடுக்காமல் பார்க்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/18&oldid=840578" இலிருந்து மீள்விக்கப்பட்டது