பக்கம்:சூரப்புலி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சாதாரணமாக வீட்டிலேயும், தெருவிைேயும் பார்க்கின்ற எருமை ஒரு மந்தமான பிராணி. "எண்டா, எருமையைப் போல மெதுவாக நடக்கிருப் ?’ என்று சுறுசுறுப்பில்லாதவனேப் பார்த்துச் சொல்வது தம் வழக்கம். நாம் பழக்கி வைத்திருக்கும் எருமை சோம்பலுக்கும் மந்தமான தன்மைக்கும் எடுத்துக்காட்டு. ஆனுல் காட்டெருமை அதற்கு முற்றிலும் வேறுபட்டது. அதன் மூர்க்கத்தனத்தையும் வேகத்தையும் வலிமையையும் அளவிட்டுச் சொல்லமுடியாது. காட்டிலேயுள்ள எந்த மிருகத்தையும் அது எதிர்த்துப் போராடப் பின் வாங்காது. கன்றைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான நிலையிலிருந்த அந்தக் காட்டெருமைக்கு இன்னும் அதிகமான பலமும் ரோசமும் தோன்றிவிட்டன. சிறுத்தைப்புலி தனது தந்திரத்தை பெல்லாம் பயன்படுத்தி அதன் முரட்டுத் தாக்குதலுக்குத் தப்பித்துக் கொண்டு பின்பக்கமாகச் சென்று காட்டெருமையின்மீது பாய முயன்றது. ஆனல் அதன் முயற்சி பலிக்கவில்லே. நினைக்க முடியாத வேகத்திலே காட்டெருமை இரண்டு பக்கங்களிலும் திரும்பித் திரும்பித் தன்னுடைய கொம்புகள் எப்பொழுதும் சிறுத்தைக்கு எதிராக இருக்குமாறு வைத்துக்கொண்டு போரிட்டது. அதன் சீற்றத்தைக் கண்டு சூரப்புலி நடுங்கியது. காட்டெருமை கோபாவேசத்தோடு சீறுகின்றபோது அதன் நாசித்துவாரங்களிலிருந்து பெரிய நாகப்பாம்பு சீறுவதுபோல் ஓசை கேட்டது. இடையிடையே இடிமுழக்கம் போலக் காட்டெருமை முழங்கியது. சிறுத்தையின் உறுமலும் சீறலும் அதைேடு கலந்து அந்தப் பகுதியையே அசைவற்று நிற்கும்படி செப்துவிட்டன. திறந்த வாயோடு சிறுத்தை தனது பல்லேக் காட்டி எருமையைப் பயமடையச் செய்த முயற்சியெல்லாம் பலிக்கவில், அதல்ை, அது ஒரே பாய்ச்சலாக எருமையின் முதுகின் மேலே பாய்ந்தது. அதன் மண்டையில் தனது பாதத்தால் அறையப் பார்த்தது. இதை எதிர்பார்த்துக் காட்டெருமை முந்திக்கொண்டது. பாய்ந்து மேலெழுந்த நிலையில் வரும் சிறுத்தையின் மார்புப்பகுதியிலே எருமை "கக் தனது கொம்புகளால் தாக்கிற்று. சிறுத்தை இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திடீரென்று கீழே சாய்ந்தது. ஆல்ை, தரையில் மல்லாந்துவிட்டால் தனது கதி அதோகதியாக முடியுமென்று அதற்குத் தெரியும். எருமையின் கொம்புகள் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/19&oldid=840579" இலிருந்து மீள்விக்கப்பட்டது