பக்கம்:சூரப்புலி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 எச்சரிக்கையோடு வந்து, நீர் அருந்திவிட்டு வேகமாக மறைந்தது. நீர் அருந்தும் முன்பு அது பல தடவை சுற்றும்முற்றும் விறைத்துப் பார்த்ததைக் காணச் சூாப்புலிக்கு அதிசயமாகவிருந்தது. கடமானின் காதுகள் ஒரு சிறிய ஓசையையும் கேட்பதற்குத் தயாராக முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருந்தன. இந்தக் கடமான் சென்ற சில விநாடிகளில் இரண்டு சிறிய மான்கள் ஆணும் பெண்ணுமாக அங்கு வந்தன. பார்ப்பதற்குக் கடமானின் குட்டிகளோ என்று நினைக்கும்படி அவை அவ்வளவு சிறியவைகளாக இருந்தன. ஆனல் அவை கடமான் குட்டிகளல்ல: அவை இரல் என்று சொல்லப்படும் அழகான சிறிய மான்கள். அவை சாதாரணமாக அடர்த்தியில்லாத பகுதிகளில்தான் காணப்படும். செடிகளும் புல்லும் நிறைந்த காட்டுப்பகுதி அவற்றிற்குப்பிடித்தமான இடம். பெரிய காட்டு விலங்குகளின் பயமும் அங்குக் குறைவு. ஆல்ை, அந்த இரண்டு இரல்களும் எப்படியோ இந்தப் பகுதிக்குத் தவறி வந்துவிட்டன. குடிநீர் கிடைக்காமல் துன்பப்பட்டு வந்தனவோ என்னவோ யார் சொல்லமுடியும் ? மரக்கூட்டத்தைவிட்டு ஆண் இரல் முன்னல் வந்தது. பெண் இரல் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டு பின்னல் அடியெடுத்து வைத்தது. அது மரங்களேத் தாண்டிக் குட்டையிலிருக்கும் வெட்ட வெளிக்கு வந்துவிடவில்லே. திடீரென்று ஒரு மலேப்பாம்பு மரத்தின் கிளைகளிலிருந்து அதன்மேல் தாவி, மின்னல் வேகத்தில் அதன் உடம்பைத் தன்னுடைய வலிமையான நீண்ட தேகத்தால் சுற்றிக் கொண்டது. சுற்றச் சுற்ற இரலேயின் எலும்புகள் படபடவென்று நொறுங்கின. மலேப்பாம்பு தனது தலேயால் இரலயின் தலேயில் ஓங்கி மோதிற்று. பரிதாபமாகக் கத்திக்கொண்டு பெண் இரல் உயிரை விட்டது. ஆண் இரலேயால் என்ன செய்யமுடியும் ? காட்டெருமைக் குள்ள பலமிருந்தால் அது சண்டைபோட்டிருக்கும். ஆல்ை மக்லப் பாம்புக்கு முன்னல் அந்தச் சிறிய பிராணி என்ன செப்பமுடியும் ? திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அது தண்ணீர்கூடக் குடிக்காமல் கானகத்திடையே புகுந்து மறைந்துவிட்டது. மலேப்பாம்பு தனது வலிமையான தசை நார்களால் இறுக்கி எலும்பை நொறுக்கியதும் அகன்ற வாயைத் திறந்து இரலேயை விழுங்கத் தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/22&oldid=840582" இலிருந்து மீள்விக்கப்பட்டது