பக்கம்:சூரப்புலி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 குரப்புலி திடுக்கிட்டுத் தயங்கி நின்றது. ஒரு நாயை அந்தக் காட்டுக்குள் அந்தப் பகுதியில் பார்த்து அந்த மனிதன் ஆச்சரியப் பட்டான். பிறகு மெதுவாக அதைக் கூப்பிட்டான். 'நாயிருந்தால் நமக்கு இந்தக் காட்டிலே ரொம்ப உதவியாகத்தானிருக்கும்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அந்த எண்ணத்தோடு குரப்புலியிடம் அன்புகாட்டி அவன் அழைத்தான். சூரப்புலியும் மனிதைேடு செல்லத் தயாராக இருந்ததல்லவா ? அதல்ை உடனே வால்க் குழைத்துக்கொண்டு அவன் பின்னல் சென்றது. அந்த மனிதன் சூரப்புலியை அழைத்துக்கொண்டு நடந்தான். அந்தப் பக்கத்துக் காடுகளிலே அவனுக்கு நல்ல பழக்கம் உண்டு என்று தோன்றியது. ஏனென்ருல், அவன் தயக்கமில்லாமல் அந்தக் 'அள்ளே புகுத்து மரக்கூட்டங்களுக்கிடையேயும் புதர்களுக் கிடையேயும் முட்செடிகளுக்கிடையேயும் வழி கண்டுபிடித்துச் சென்ருன். உண்மையில் அங்கு வழியொன்றும் இருக்கவில்லே. அடிக்கடி நடந்த பழக்கத்தினுல் அவன் சற்றும் மலேக்காமல் சென்ருன். கடைசியில் அவன் பாறைகள் நிறைந்த ஓரிடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். ஒரு பக்கத்திலே ஒரு செங்குத்தான சிறு குன்று இருந்தது. ஆனால், சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த மரக் கூட்டத்தில்ை தூரத்திலிருந்து பார்த்தபோது அது கண்ணுக்குப் புலப்படவில்லே. குன்றின் வலப்புறத்திலே சிலுசிலுவென்று தண்ணீர் ஒடிக்கொண்டிருந்தது. மேலே எங்கோ உயரமான பகுதியிலிருந்து ஊற்றெடுத்து அப்படி வந்துகொண்டிருக்க வேண்டும். தண்ணிர் அதிகமாக இல்லாவிட்டாலும் எப்பொழுதும் வற்ருமல் ஒடிக்கொண் டிருந்தது, இந்த நீரோடைக்கு அருகிலேயே குன்றின் இடுக்கிலே *ற்று சிரமத்தோடு குனிந்து நுழைந்து சென்ருல் ஒரு வளவைத் திரும்பிய பிறகு உட்பகுதியிலே ஒரு சிறிய குகை உண்டு. அந்தக் இகை யாருடைய பார்வையிலும் படாதிருந்தது. குன்றின் இடுக்கிலே "மர்த்தியமாக நுழைந்தவர்கள்தாம் அதை அடையமுடியும். குகைக்கு முன்னல் சிறிதளவு திறந்த வெளியும் இருந்தது. அங்கே ன்ேறு மூன்று கற்களே வைத்து அடுப்புக் கூட்டியிருந்தார்கள். அந்த "னிதன் சூரப்புலியை அழைத்துக்கொண்டு குகைக்குள் சென்ருன். அங்கே அவன் வரவை எதிர்பார்த்திருந்தவன் போல, தாடிக்காரன் ஒருவன் கருகருவென்று குதிர்போல அமர்ந்திருந்தான். எண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/24&oldid=840584" இலிருந்து மீள்விக்கப்பட்டது