பக்கம்:சூரப்புலி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பின்னங்கால்கள் இரண்டின் மேலும் பலமாக விழுந்தது. கால் எலும்பு கள் இரண்டும் நடுப்பகுதியில் முழங்கால்களுக்கு மேலே ஒடிந்து தொங்கின. சூரப்புலி வீல் என்று துயரந்தாங்காது கத்திற்று. பின்னங்கால்கள் ஒடிந்து போனதால் அதல்ை தாடிக்காரனத் தாக்கவும் முடியவில்லே. முன்னங்கால்களால் மட்டும் அது நடக்க முடியுமா? அது புலம்பிக்கொண்டு படுத்துக் கிடந்தது. தாடிக்காரன், "இப்படியே கிடந்து சாவு,' என்று உறுமிவிட்டு அங்கிருந்து மறைந்து போனன். பொறுக்க முடியாத வேதனையோடு சூரப்புலி கத்திக்கொண்டும் புலம்பிக்கொண்டும் குகைக்குள்ளே கிடந்தது. அதனுல் நகரவேமுடிய வில்லை. முன்னங்கால்களைக்கொண்டு நீந்துவது போல நகர முயன்ருலும் ஒடிந்த கால்களிலிருந்து வேதனே அதிகரித்தது. மேலும், கழுத்திலே கயிறு கொண்டு கட்டிக் கிடப்பதால் அந்த இடத்தை விட்டு வெளியே வரவும் முடியாதல்லவா? அதல்ை, அது என்ன செய்வதென்று தோன்ருமல் தவித்துக்கொண்டு கிடந்தது. மூன்று நாட்கள் இரவு பகலாகச் சூரப்புலி இப்படி வேதனையோடு வாடிற்று. அழுது புலம்பி அதன் தொண்டை வரண்டுவிட்டது கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும் அதற்குச் சிறிது ஆறுதலாக இருக்கும். பக்கத்திலேயே ஒடை இருந்தும் அங்கு போக முடிய வில்லை. வயிற்றுப் பசியும் சேர்ந்துகொண்டு சூரப்புலியை வாட்டிற்று. சூரப்புலி தன் தைையப் பின்னங்கால்களின் பக்கமாக நீட்டி அவற் றை நாக்கால் நக்க முயன்றது. அப்படிச் செய்வதால் ஒடிந்த பகுதி யில் வலி மேலும் அதிகமாயிற்றே ஒழியக் குறையவில்லை. சூரப்புலி யின் புலம்பலும் அழுகைக் குரலும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தன. அதன் உள்ளத்திலே மறுபடியும் மனிதகுலத்தின்மீது அளவு கடந்த வெறுப்பு மேலோங்கிற்று. அந்தக் குகையைப் பயன்படுத்திய மனிதர்கள் எல்லோரிடத்திலும் அதற்குக் கோபம் பொங்கியது. தாடிக்காரனிடம் சொல்லவொண்ணுத வெறுப்பும் ஆத்திரமும் அதன் உள்ளத்திலே கொந்தளித்தன. அன்று சூரப்புலி தன் கடமையைச் செய்யாததற்கு யார் காரணம்? அந்த மனிதர்கள் சாராயத்தை அதன் வாயில் ஊற்ருமலிருந்தால் அது தன் கடமையில் தவறியிருக்காது. அதன் வாயில் போதைப் பொருளை வலிய ஊற்றி அதன் அறிவை பிழக்கும்படி செய்துவிட்டுப் பிறகு அதன் மேலே கோபம் கொள்வது நியாயமாகுமா? தாடிக்காரன் மிகுந்த கொடுமைக்காரன். சமயங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/33&oldid=840594" இலிருந்து மீள்விக்கப்பட்டது