பக்கம்:சூரப்புலி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கொண்டுவந்தார். அதைப் பிளந்து நான்கு பத்தைகள் தயார் செய்தார். ஒவ்வொரு காலிலும் எதிரெதிர்ப் பக்கமாக இரண்டு பத்தைகளே வைத்து ஒடிந்த எலும்புகளையும் சரியானபடி பொருத்தி வைத்துக் கட்டினர். பத்தைகளுக்கு மேலே அவருடைய மேலாடை பிலிருந்து கிழித்த துணிதான் கட்டுவதற்குப் பயன்பட்டது. அந்தத் துணியையே சிறு நாடாக்களப் போலக் கிழித்து அவற்றைக் கயிருகத் திரித்து, பத்தைகள் இடம் பிசகாதபடி நன்ருகக் கட்டி வைத்தார். அவர் கட்டும் போதெல்லாம் வலி தாங்கமாட்டாமல் குரப்புலி வீரிட்டுக் கத்திற்று. அப்படிக் கதறும்போது அதை அன்போடு துறவி தடவிக்கொடுத்தார். இருந்தாலும் தாடி வைத்துக் கொண்டிருக்கிற அந்தத் துறவியின் மீது சூரப்புலிக்குக் கோபம் தனியவில்லை. மனித குலமே தன்னத் துன்புறுத்துவதற்காகவே இருக்கிறது என்று சூரப்புலிக்குத் தோன்றிற்று, அதன் வாய்மட்டும் கட்டப்படாமல் இருந்தால் அது துறவியை நன்ருகக் கடிக்க முயன்றிருக்கும்.

உடம்பை அசைக்க முடியாத நிலையிலும் அது துறவியைக் கோபத்தோடு பார்த்து அடிக்கடி உறுமிற்று. கோபப்படாதே. உனக்கு நல்லதுதான் செய்கிறேன்' என்று அவர் சிரித்துக் கொண்டே கூறினர். சூரப்புலி சீறிக்கொண்டு அவரைக் கனல் தெறிக்கப் பார்த்தது. மனிதனேக் கண்டாலேயே உனக்குப் பிடிக்க சூ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/36&oldid=1276984" இலிருந்து மீள்விக்கப்பட்டது