பக்கம்:சூரப்புலி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பொருத்தி வைத்துக் கட்டின்ை ? எதற்காக அவன் உணவும் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தான் ? முகத்தை மூடிக்கொண்டு என் உதவி செய்தான் ? பிறகு எங்கே போய்விட்டான் ? அவன் மனிதனல்லவோ ? வேறு வகையான ஒரு பிறவியா ? அவனுக்கும் தாடிக்காரனப்போலத் தாடியிருந்ததே ! காட்டிலே வாழ்கின்ற ஆண் வரையாட்டிற்குக்கூடத் தாடியிருக்கிறது. ஆனல் அது மனித இனமல்ல. அது போல அவன் வேறு இனமா ? அவனிடம் அன்பு நிறைய இருக்கிறது. அவனப் பார்த்துப் பழகிக்கொள்ள வேண்டும். ஆனல் அவன் எங்கே இருக்கிருனே ? இவ்வாறு சூரப்புலியின் உள்ளத்திலே எண்ணங்களும், கேள்வி களும் எழும். துறவியைப்பற்றிய எண்ணம் பல தடவை வந்ததால் அவரைப் பார்க்க வேண்டும் என்று அது விரும்பியது. இந்த விருப்பம் புதியதாக ஏற்பட்ட ஒரு சம்பவத்திற்குப் பிறகு மிக அதிகமாயிற்று. ஒரு நாள் சூரப்புலி ஒரு முள்ளம்பன்றியைக் கண்டது. அதைேடு குறும்பாகச் சண்டையிட ஆரம்பித்தது. காளேப் பருவத்துத் துடுக்கே இந்தச் சண்டைக்குக் காரணம். ஆனல் சூரப்புலி முள்ளம்பன்றியின் மேல் பாய முயன்றபோது முள்ளம் பன்றி தனது நீண்ட கூரிய முட்களில் ஐந்தாறை அதன் கழுத்திலும் மார்பிலும் தைக்கும்படி செய்துவிட்டது. அது உடம்பைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/41&oldid=1276982" இலிருந்து மீள்விக்கப்பட்டது