பக்கம்:சூரப்புலி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மூங்கில் தடியால் அடிபட்ட உருளைக்கிழங்கு மண்டியின் வழியாகச் சூரப்புலி இரவு பன்னிரண்டு மணி சுமாருக்குச் சென்றது. அந்த இடத்தைக் கண்டதும் அதற்குத் திடீரென்று கோபம் உண்டாயிற்று. சட்டென்று வீதியை விட்டு மண்டியின் முன்பகுதிக்குள் நுழைந்தது. அன்றிரவும் அங்கே தாழ்வாரத்தில் இரண்டு பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனல் நல்ல வேளை. அவர்கள் பழைய ஆசாமிகள் அல்ல. பழைய ஆசாமிகளைப் போலவே அவர்களும் தூக்கத்தில் சூரப்புலிகளாக இருந்தாலும் ஆட்கள் வேறு. அதல்ை அவர்களேப்பற்றிச் சிந்திக்காமல் வெளியே வந்தது. மீண்டும் வீதிகளின் வழியாகச் சுற்றலாயிற்று. சிறிய குட்டியாக இருந்த போது அது இப்படித்தானே அந்த விதிகளில் அகலந்தது ? காக் வேளையிலே அது பாக்கு வியாபாரியின் மாளிகைக்கு முன்னல் வந்து நின்றது. உள்ளே நுழைய அதற்கு விருப்பமில்லே. ஆல்ை உள்ளே உற்றுப் பார்த்துவிட்டு மாளிகையின் எதிர்ப்புறமாகச் சாலயோரத்தில் சென்று அங்கிருந்த ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அது அந்த இடத்தை விட்டு அசையவில்லை. அதன் பிறகு மாளிகை வாயில் ஒரு வேக்)க்காரன் திறந்துவைத்தான். சடையன் வேகமாக வெளியே ஓடிவந்தது. அதன் வருகையைத்தான் சூரப்புலி எதிர்பார்த்துப் படுத்திருந்தது. சடையனக் கண்டதும் சூரப்புலி கோபத்தோடு எழுந்து அதனருகே சென்றது. சண்டையே அதன் நோக்கம் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. சடையன் எமாந்திருக்கும் சமயத்தில் அதனிடம் போரிட அது கருதவில்லை. எச்சரிக்கை செய்துவிட்டே முன் சென்றது. அதன் தோற்றத்தைக் கண்டதுமே மாளிகைக்குள் ஒடிவிடலாம் என்று சடையன் கருதியிருக்கவேண்டும். ஆனல் சூரப்புலி அதை விட்டுவிடவில்லை. மாளிகை வாயிற்பக்கமாக அது சட்டென்று சென்று சடையன மடக்கிக்கொண்டது. சண்டையிடு வதைத் தவிரச் சடையனுக்கு வேறு வழியில்லே. நன்ருகக் கொழுத் திருக்கும் சடையன் தனது பருத்த உடம்பின் தோற்றத்தைக் கொண்டே இதுவரை பல நாட்களே மிரட்டி வந்தது. அந்த மிரட்டல் இப்பொழுது சூரப்புலியிடம் பலிக்கவில்லே. சூரப்புலியின் உடம் பெல்லாம் முறுக்கேறிய தசை நார்கள் மிகுந்திருந்தன. காட்டு விலங்குகளே எதிர்த்துப் பேரராடிக் கொல்லும் தினசரி வாழ்க்கையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/46&oldid=840608" இலிருந்து மீள்விக்கப்பட்டது