பக்கம்:சூரப்புலி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைகள் மிகுந்த பலங்கொண்டிருந்தன. மேலும் சூரப்புலி எதிரியைத் தாக்குவதில் புதிய புதிய முறைகளைக் கற்றிருந்தது. அதல்ை அது ஒரு நொடியிலே சடையனக் கீழே வீழ்த்தி அதன் குரல் வளையைப் பிடித்துக் கடித்துப் பிய்த்தெறிந்துவிட்டது. மறுபடியும் சடையன், விழுந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவேயில்லே. சத்தங் கூடப் போடாமல் அப்படியே உயிரை விட்டுவிட்டது. குட்டிப் பருவத்திலே தன்னைத் துன்புறுத்திய சடையனப் பழி வாங்கிய குதூலத்தோடு சூரப்புலி அங்கிருந்து மிடுக்கோடு புறப் பட்டது. அதற்கு எங்கு போவதென்று புலப்படவில்லே. கால் போன போக்கிலே நடந்தது. கடைசியாக அது மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் பெரிய சாலேக்கு வந்து சேர்ந்தது. அன்று அந்தச் சாலே யிலே வண்டிகள் நிறையப் போய்க்கொண்டிருந்தன, கால்நடையாக வும் பல பேர் மூட்டை முடிச்சுகளுடன் சென்றுகொண்டிருந்தார்கள். உற்சாகமாக ஆண்களுப் பெண்களும் பேசிக்கொண்டு போவதைப் பார்த்தால் எதோ ஒரு திருவிழாவுக்குச் செல்பவர்களைப் போலத் தோன்றிற்று. கோவிந்த பாரக், கோவிந்த பாரக்' என்று கோஷ மிட்டுக்கொண்டு தீப்பந்தத்தை எந்திய தாசர்கள் ஆவேசங்கொண்ட வர்களைப்போல ஆடிக்கொண்டு சென்ருர்கள். சூரப்புலிக்கு இந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/47&oldid=1276981" இலிருந்து மீள்விக்கப்பட்டது